8 வயதில் ஒரு பெண் ஒவ்வொரு அலுவலகத்திலும் ஏறி இறங்கி சினிமா வாய்ப்பிற்காக அழைந்த கதை குறித்து இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் பகிர்ந்ததைப் பார்ப்போம்.
நம்முடைய 8 வயதில் நாம் என்ன செய்திருப்போம் என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்புதான் வரும். சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்திருப்போம், ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று கதறியிருப்போம், மணலில் உணவு சமைத்து விளையாடியிருப்போம், இதுபோல பல விஷயங்களை செய்திருப்போம். ஆனால், அந்த சிறுவயதில் பொறுப்பாக ஒரு வேலை தேடி சென்றிருக்கிறீர்களா?
இந்தக் கேள்வியே மிகவும் தவறானதுதான் என்று தெரிகிறது. ஏனெனில், சிறு பிள்ளையில் அந்த வயது அனுபவங்களை பெறுவதுதான் நல்லது. ஆனால், அந்த அனுபவங்களை பெறாது, சிறு பிள்ளைகள் போல் விளையாடாமல், யோசிக்காமல், நடந்துக்கொள்ளாமல் வளர்ந்தது வாழ்வில் எவ்வளவு பெரிய ஒரு இழப்பு.
அப்படி தனது 8 வயதில் சினிமா வாய்ப்புத் தேடி அழைந்த ஒருவர்தான் கோவை சரளா. கோவை சரளா இன்றும் பலருக்கும் பிடித்த காமெடி நடிகையாகவே இருந்து வருகிறார். இவரின் பேச்சுக்கும் ஸ்லாங்கிற்குமே தனி ரசிகர்கள் உள்ளனர். மனோரம்மாவிற்கு பிறகு கோவை சரளாதான் காமெடி நடிகை என்ற இடத்தை நிரப்பியவர். ஆனால், இவருக்கு பிறகு ஒரு காமெடி நடிகையே இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.
அந்தவகையில் கோவை சரளா குறித்து பாக்யராஜ் பேசியதைப் பார்ப்போம். “நான் நடிக்க வாய்ப்புக் கேட்டு போன அதே கம்பேனிலதான் கோவை சரளாவின் அக்காவும் வாய்ப்பு கேட்டு வந்தாங்க. அவருடன் கோவை சரளாவும் வாய்ப்பு கேட்டு வந்துருந்தாங்க.
அப்போ அவுங்க வயசு 8. உனக்கு சினிமா முகம் இருக்கு, உங்க அக்காவவிட நீ சினிமாவுல பெரிய ஆளா வருவன்னு அப்போவே சொன்னேன். அப்போ நானும் சினிமாக்குள்ள வரல. அப்றம் கொஞ்சம் வருஷம் கழிச்சு வந்தாங்க… முந்தானை முடிச்சு படத்துல என்கிட்ட சண்ட போட்டு Chance வாங்கி நடிச்சாங்க…” என்று பேசினார்.
கவுண்டமணி செந்தில் போன்ற முன்னணி நடிகர்களையெல்லாம் அறிமுகம் செய்தவர் பாக்யராஜ். கோவை சரளாவுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்து சினிமாவில் தூக்கிவிட்டு மற்றொரு பெரிய நடிகையை சினிமாவுக்கு கொடுத்தவர் பாக்யராஜ்.