இளைஞர்களின் நட்பை மையப்படுத்தி உருவாகும் கும்பாரி!
அண்ணன் தங்கை பாசத்தை, இளைஞர்களின் நட்பை மையப்படுத்தி உருவாகும் கும்பாரி.
நடிகர்கள்:
விஜய் விஷ்வா, நலீம் ஜியா, மஹானா சஞ்சீவி, ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார்
ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். மேலும் ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் முதல் பாடலான கும்பாரி பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு பிறகு படத்தை திரையிடும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
தயாரிப்பாளர் ; குமாரதாஸ்
இயக்குனர் : கெவின் ஜோசப்
இசை : ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி
படத்தொகுப்பு : T.S.ஜெய்
ஒளிப்பதிவு : பிரசாத் ஆறுமுகம்
சண்டைப்பயிற்சி : மிராக்கிள் மைக்கேல்
நடனம் ; ராஜுமுருகன்