காளியோட ஆட்டத்த பாத்தீங்களா? லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

லால் சலாம்
லால் சலாம்

ஸ்வர்யா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்த படம் தான் லால் சலாம். தனுஷின் 3 மற்றும் கௌதம் கார்த்திக்கின் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையை வைத்து முதன்முறையாக படத்தை இயக்கியுள்ளார்.

ஏற்கனவே 2வது மகள் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த், தற்போது தான் முதல் மகள் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என தெரிகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் லால் சலாம். இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சிக்கு அருகே உள்ள மூரார்பாத் என்ற ஊரில் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அரசியலுக்காக அவர்களுக்குள் பிளவு ஏற்படுத்த அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். அதில் வெற்றியும் அடைகிறார்கள். இதனால் அந்த கிராமம் என்னானது? அதனால் யார் யாருக்கு இழப்பு ஏற்பட்டது? இறுதியில் ஊர் ஒன்று சேர்ந்ததா? என்பதுதான் லால் சலாம்.

மதத்தின் பெயரால் சிலர் நம்மை பிரித்தால நினைத்தாலும், நாம் ஒன்றாக இருந்து அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற கருத்துடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, லால் சலாம் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com