தன்யா
தன்யா

வெடிக்கும் நடிகை தன்யா பிரச்சனை.. ரஜினி லால் சலாம் படத்திற்கு தடை கோரி மனு!

Published on

லால் சலாம் படத்தினை தமிழகத்தில் வெளியிட தடைவிதிக்க கோரி சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள திரைப்படம், லால் சலாம். இத்திரைப்படத்தில் விஷ்னு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா என பலர் நடித்திருக்கின்றனர். இதன் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 26ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து, இன்னும் சில நாட்களில் இப்படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

தமிழர்களை இழிவுபடுத்தி கருத்து பதிவிட்டதாக கூறப்படும் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவுக்கு லால் சலாம் படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த விளக்கத்தில் அந்த கருத்து நான் கூறியதே இல்லை, 12 வருடம் முன்பும் இதை தெளிவுபடுத்த விரும்பினேன் என கூறியிருந்தார். மேலும், அந்த ஸ்க்ரீன் ஷாட் ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யாவிற்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், “தன்யா கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வெளிவந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். ஆகவே இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும்‌ என மனுதாரர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com