விமர்சனம் லால் சலாம்
விமர்சனம் லால் சலாம்

விமர்சனம் லால் சலாம்!

மத நல்லிணக்கத்திற்கு ஒரு லால் சலாம்!(3.5 / 5)

ஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்,ரஜினிகாந்த்  விஷ்ணு விஷால், விக்ராந்த்  நடித்துள்ள  படம் லால் சலாம். சூப்பர் ஸ்டார் சிறப்பு தோற்றம் என்று டைட்டிலில் வந்தாலும் படம் ஆரம்பித்து சில காட்சிகளுக்கு பிறகு ரஜினி வந்து விடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்து விடுகிறது. அறிமுக காட்சியிலேயே மாஸ் சண்டை காட்சியுடன் அரங்கம் அதிர மாஸ் என்ட்ரி தருகிறார் ரஜினி . 

1992 ஆம் ஆண்டு பாபர் மஜூதி இடிகப்பட்ட பின்பு ஆங்காகங் கே  மத கலவரஙகள் நடக்கின்றன.தமிழ் நாட்டின் வடக்கு மாவட்டத்தில் ஒரு சிறு ஊரில் ஹிந்து மக்களும், இஸ்லாமியர்களும் அன்பாக வாழ்கிறார்கள். ஓட்டுகாக இந்த இரு மக்களையும் பிரிக்க பார்கிறார் ஒரு அரசியல்வாதி. இதற்கு கிரிக்கெட் விளையாடும் திரு மற்றும் சம்சுதீன் என்ற வெவ்வேறு மதங்களை சேர்ந்த இளைஞர்களை தூண்டி விடுகிறார்.  ஊர் இரண்டானால் என்ன ஆகும் என்பதே லால் சலாம். 

ஒரு கதைக்குள், கிரிக்கெட், மதம் ஊர் திருவிழா என அனைத்தையும் சொல்லி உள்ளார் ஐஸ்வர்யா. படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக நகரந்தாலும்  இரண்டாவது பாதி ஆழமாக பரபப்புடன் நகர்கிறது. "ராமருக் கு   கோவிலை மனசுல கட்டுங்கய்யா" என்று ரஜினி வள்ளி படத்தில் சொன்ன வசனத்தை மனதில் வைத்து  ஐஸ்வர்யா இந்த 2024ல்  லால் சலாம் படத்தை தந்துள்ளார் என்றே சொல்லலாம். மாஸை விட நடிப்பில் சூப்பர் தலைவா என்று சொல்ல வைக்கிறார் ரஜினி.

ஒரு தந்தையாக அற்புதமாக நடிப்பை தந்துள்ளார். நாமாஸ் செய்யும் போதும், நடை உடை பாவனையில் ஒரு உண்மையான முஸ்லீமை கண்முன் கொண்டுவருகிறார். வரே வா மொய்தீன் பாய் என நம்மை அறியாமல் சொல்கிறோம்.

விஷ்ணு விஷால், விக்கிரகாந்த் இருவரும் முரட்டு இளைஞனாக கிரிக்கெட் வீரர்களாக சிறந்த நடிப்பை தந்துள்ளார்கள். நீண்ட இடை வெளிக்கு பின்பு ஜீவிதா திரையில் வந்துள்ளார். காமெடி நடிகர் செந்திலின் மாறுபட்ட நடிப்பை வெளிக்கொண்டு வந்துள்ளார் ஐஸ்வர்யா. 

இதையும் படியுங்கள்:
மதுரை தந்த மாமேதை!
விமர்சனம் லால் சலாம்

ஏ. ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் கேட்கும் படி உள்ளது.விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவின் திறமை ஊர் திருவிழாவில் தெரிகிறது. பாபர் மசூதி, ராமர் கோவில் என சமூக வலைத்தளங்களில் பேசப்படும் இன்றைய கால கட்டத்தில் மத நல்லிணக்கம் பற்றி ஆழமாக பேசுகிறது. ஈஸ்வர அல்லா தேரே நாம் என்பதை அழுத்தமாக சொல்கிறது லால் சலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com