"என் அப்பாவை சங்கினு சொல்லாதீங்க.. அவர் சங்கி இல்லை" கொந்தளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

"என் அப்பாவை சங்கினு சொல்லாதீங்க.. அவர் சங்கி இல்லை" கொந்தளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

டிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் தனது தந்தையை யாரும் சங்கி என்று சொல்லாதீர்கள் என கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர். நடிகர் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி 9ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி போனது. இந்த நிலையில் நேற்று சென்னையில் லால் சலாம் படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் பங்கேற்றார். முதல் முறையாக தந்தையை வைத்து படம் இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேடையில் இது குறித்து பேசினார்.

அப்போது அடிக்கடி தான் தனது தந்தையை சங்கி என்று சொல்லும் வார்த்தையை கேட்கிறேன். அப்படி என்றால் என்ன என கேட்டபோது, அது ஒரு அரசியல் சார்ந்து இருப்பது என கூறினார்கள். ரஜினிகாந்த் சங்கி இல்லை. யாரும் அப்படி சொல்லாதீர்கள். எனக்கு அது வருத்தமாகவுள்ளது. சங்கியாக இருப்பவர்கள் யாரும் லால் சலாம் படத்தின் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள்.

படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும் என தெரிவித்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே சங்கி என்ற வார்த்தை சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதை பயன்படுத்தி தந்தையை அப்படி கூற வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com