மறைந்த துணை நடிகர் பிரபு! முன்நின்று இறுதிச் சடங்குகளை செய்த இசையமைப்பாளர் டி.இமான்!

மறைந்த துணை நடிகர் பிரபு! முன்நின்று இறுதிச் சடங்குகளை செய்த இசையமைப்பாளர் டி.இமான்!
Published on

தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் நடிகர் பிரபு.

2009ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமாக அறியப்பட்டார். இந்நிலையில், இவர் கடந்த சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார். ஆதரவற்று இருந்த அவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகளை செய்துவந்தார்.

இதையடுத்து, நேற்று திடீரென சிகிச்சை பலனின்றி துணை நடிகர் பிரபு காலமானார். இவரது இழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் இதுவரை அவருக்கு மருத்துவ உதவி செய்து வந்த நிலையில், அவரும் குடும்ப உறுப்பினராக கலந்துகொண்டு, சென்னையில் உள்ள சுடுகாட்டில் அவருக்கு இறுதிச் சடங்குகளையும் செய்து வைத்தார்.

இதுகுறித்து, டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் துணை நடிகர் பிரபுவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "நடிகர் பிரபு (படிக்காதவன் மற்றும் பல படங்கள்) இப்போது நம்மிடையே இல்லை. அவர் 4-ம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் இன்று காலை நம்மைப் பிரிந்து வேறு உலகத்திற்கு சென்றார். அவரை மீட்க மருத்துவர்கள், செவிலியர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களால் இயன்ற அளவு முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. ஓய்வில் இருங்கள் சகோதரரே. என் இதயப்பூர்வமான இரங்கல்கள்." என்று பதிவிட்டுளளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com