லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

"அலப்பறை கெளப்புறோம்" வந்தாச்சு LCU-வின் அடுத்த அப்டேட்!

Published on

இன்றைய கால இளைஞர்களின் ஃபேவரைட்டாகவும், தனித்து தெரிபரவாகவும் விளங்குபவர் தான் லோகேஷ் கனகராஜ். வெறும் 5 படங்கள் கொடுத்து டாப் ஸ்டாராக விளங்குகிறார். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்தவர். டாப் ஹீரோக்களான விஜய், கமலை வைத்து படம் இயக்கியவர். அனைவரும் லோகி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஏங்க வைத்தவர். இவர் நடிப்பில் இதுவரை வெளியான திரைப்படம் மாநாடு, கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ தான். டாப் நடிகரான விஜய்யை வைத்தே 2 படங்களை எடுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான லியோ திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடுத்த படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொல்லை கொடுத்து வரும் நிலையில், அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஜினியை வைத்து படம் இயக்குவேன் என அறிவித்திருந்தார். அதன் படி, ’தலைவர் 171’ படத்திற்கான கதையை அடுத்த வாரத்தில் இருந்து எழுத தொடங்குவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள ’அவள் பெயர் ரஜினி’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், அப்படத்தின் டிரைலரை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், படக்குழுவினரையும், நடிகர் காளிதாஸ் ஜெயராமையும் வெகுவாக பாராட்டினார். அப்போது, ரஜினிகாந்த் நடிப்பில் தான் இயக்க இருக்கும் படத்திற்கான அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

நல்ல படமாக இருந்தால் உழைப்புக்கான மரியாதையை ரசிகர்கள் கொடுப்பார்கள் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com