அடுத்த படத்திற்கு தயாரான லெஜெண்ட்.. வைரலாகும் போட்டோ!

லெஜெண்ட்
லெஜெண்ட்

லெஜெண்ட் சரவணன் அடுத்த படத்திற்கு தயாராகும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிடுள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கி வந்த ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லெஜண்ட் சரவணன். கூடிய சீக்கிரமே புதிய பட அறிவிப்பை வெளியிடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அதற்கான ஹிண்டாக ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

வெறும் விளம்பரத்தில் நடித்து வந்த லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் என்ற படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படம் கணிசமான வெற்றியையே கொடுத்த நிலையில், அடுத்த படம் நல்ல படியாக கொடுக்க வேண்டும் என இயக்குனரை தேடி வருகிறார் லெஜண்ட் சரவணன்.

சில நாட்களுக்கு முன்பாக துரை செந்தில் குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தனது எக்ஸ் தளத்தில் தன்னுடைய இரண்டாவது படம் குறித்து பேசியுள்ளார லெஜெண்ட் சரவணன். அதில், "All Set for #LegendsNext Process Started…. Revealing Soon…" என பதிவு செய்துள்ளார். மேலும் தன்னுடைய சில லேட்டஸ்ட் புகைப்படங்களை இந்த பதிவில் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் விரைவில் லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளிவரப்போகிறது என தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com