"அன்பெனும் ஆயுதம் தானே" வெளியானது லியோ 3வது பாடல்!

லியோ
லியோ

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் 3-வது சிங்கிள் பாடலான 'அன்பெனும்' பாடல் வெளியானது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அந்த பாடலில் மதுபானங்கள் குறித்த வரிகள் இடம்பெற்றதுடன் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு அப்போதே எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

லியோ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக எக்ஸ் தளத்தில் அண்மையில் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் படத்தின் போஸ்டர்களும் வெளியாகின. மேலும் லியோ இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி எழும்பூர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ரத்து செய்யப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் லியோ படத்தின் 2வது பாடலான லியோ தாஸ்மா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே, தற்போது லியோ படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. ‘அன்பெனும்’ என்று தொடங்கிய இந்த பாடல் வெளியாகிய 1 மணி நேரத்திற்குள் மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. உயிர் பாதி உனக்கே என விஜய் - த்ரிஷாவின் காதல் பாடல் பலரையும் உருக செய்கிறது. இதனை கேட்ட பலரும் விஜய் - த்ரிஷா ஜோடியை கொண்டாடி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com