BaDass மா.. லியோ தாஸ்மா.. தெறிக்க விடும் லியோ 2வது பாடல்!

BaDass மா.. லியோ தாஸ்மா.. தெறிக்க விடும் லியோ 2வது பாடல்!
Vijay Kumar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் 2ஆவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பாடலுக்கான ப்ரமோ வெளியாகிய 12 மணிநேரத்தில் இருபது லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். இதனால் ட்டுவிட்டர் எக்ஸ் தளத்தில் Mr. #LeoDas #Badass எனும் ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகியுள்ளது.

லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் கடந்த ஜூன் 22ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அந்த பாடலில் மதுபானங்கள் குறித்த வரிகள் இடம்பெற்றதுடன் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு அப்போதே எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

லியோ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக எக்ஸ் தளத்தில் அண்மையில் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் படத்தின் போஸ்டர்களும் வெளியாகின. மேலும் லியோ இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி எழும்பூர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ரத்து செய்யப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் லியோ படத்தின் 2வது பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடலையும் நா ரெடி பாடலை எழுதிய விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அனிருத் இசையில் அவரே அட்டகாசமாக இந்த பாடலை பாடியுள்ளார். BaDass மா.. லியோ தாஸ்மா என அவரும் கூறும்போது இப்போதே சிலிர்க்கிறது என்றும், தியேட்டரில் வீடியோவுடன் வந்தால் அனல் பறக்கும் எனவும் ரசிகர்கள் கமெண்ட்களை தட்டி வருகின்றனர்.

பாடல் வெளியாகி அரைமணிநேரத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com