அமைதியாக இரு.. எதிரியை எதிர்நோக்கு.. லியோ படத்தின் ஹிந்தி போஸ்டர் வெளியீடு!

லியோ போஸ்டர்
லியோ போஸ்டர்
Published on

விஜய்யின் லியோ படத்தின் ஹிந்தி போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக தெலுங்கு, கன்னட, தமிழ் போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்று ஹிந்தி போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் இடம்பெற்ற, நா ரெடி என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் வரிசையாக போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர் லியோ படக்குழுவினர். முன்னதாக வெளியான தெலுங்கு போஸ்டரில், ‘KEEP CALM AND AVOID THE BATTLE’ என எழுதப்பட்டிருந்தது. அதற்கு தக்கவாறு சாந்தமான விஜய்யின் படம் கூலான காஷ்மீர் பேக்ரவுண்டில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக வெளியான கன்னட போஸ்டரில் துப்பாக்கிக்குள் விஜய் இருப்பது போன்ற டிசைனில், ‘KEEP CALM AND PLOT YOUR ESCAPE’ என எழுதப்பட்டிருந்தது.

நேற்று வெளியாகியிருக்கும் தமிழ் போஸ்டரில், ‘KEEP CALM AND PREPARE FOR BATTLE’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஹிந்தி போஸ்டரில், Keep calm and face the devil என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 4 போஸ்டர்களையும் வரிசையாக அடுக்கிப்பார்தால் அது சொல்ல வருவது ஒன்று தான். அமைதியாக இருக்கவும். தப்பிக்க திட்டமிடவும். முடியாத பட்சத்தில் எதிர்த்து நின்று போரிடவும்.

இதன் மூலம் அமைதியாக இருக்கும் நாயகன், பிரச்சனையிலிருந்து தப்பிக்க நினைத்து பின் எதிர்த்து திருப்பி அடிக்க துணிவதே ‘லியோ’ என்பது தெரியவருகிறது. இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com