

இந்த வாரம் வெள்ளிக்கிழமை (20/3/2026)க்கு ஒரு நாள் முன்னதாக 19/3/2026 வியாழன் அன்றே எல்லாப்படங்களும் ரிலீஸ் ஆகிறது. அஜித் குமார் தான் இப்படி முதன் முதலாக ஆரம்பித்தார். வியாழக்கிழமை அவருக்கு ராசி என்பதால், இப்போது எல்லோரும் அதை பாலோ செய்கிறார்கள்.
இந்த வாரம் 3 நேரடித் தமிழ்ப் படங்களும், 1 ஹிந்தி, 1தெலுங்கு டப்பிங் படங்கள் என மொத்தம் 5 படங்கள் மோதுகின்றன.
1. யூத் (Youth) - ரொமாண்டிக் காமெடி டிராமா
நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி ஆக நடித்துப்புகழ் பெற்ற காமெடி நடிகர் கருணாசின் மகன் கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் யூத்.விஜய் நடித்த யூத் படத்தின் கதைக்கும்,இதற்கும் சம்பந்தம் இல்லை.
இது துள்ளுவதோ இளமை,3 போன்ற பள்ளிப்பருவக் காதலை மையமாகக் கொண்ட படம்.ட்ரெய்லர் அனைவரது கவனத்தையும் கவரும் விதமாக உள்ளது.
ட்ரெய்லர் பார்த்ததில் நான் உணர்ந்த விஷயங்கள் :
1. தனுஷ் ,விஜய் ரெப்ரன்ஸ் படம் முழுக்க இருக்கிறது.
2. நாயகனின் அப்பாவாக மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, அம்மாவாக தேவதர்சினி நடித்துள்ளனர். நாயகிகளாக புதுமுகங்கள் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்சி யாதவ் நடித்துள்ளனர்.
3. மலையாள மெகா ஹிட் படமான பிரேமலு பட சாயலில் டீன் ஏஜ் லவ் ஸ்டோரி ஆக வந்திருக்கிறது.
4. நாயகன் 3 பெண்களை காதலிக்கிறார்.
5."மஞ்ச பலூனு", "வா என் வெள்ளை நிலவே", "முட்டைக்கலக்கி" ஆகிய பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளன. கென் கருணாஸ் பாடலாசிரியராகவும், பாடகராகவும் இதில் களம் இறங்கியுள்ளார்.முட்டைக்கலக்கி பாட்டு ஜிவிபி +கென் கருணாஸ் இணைந்து பாடி கலாட்டா செய்திருக்கும் காட்சி அருமை.
மகன் பெரிய ஐ. ஏ.எஸ் ஆபீசர் ஆக வேண்டும் என்ற கனவில் அம்மா இருக்க மகனோ காதல் தான் என் பாதை என பெண்கள் பின்னால் சுற்றுகிறார்.அம்மாவின் கனவு பலித்ததா?நாயகன் காதலித்த பெண்ணை கரம் பிடித்தாரா?என்பது க்ளைமாக்ஸ்
+1, +2 படிக்கும் கால கட்டத்தில் நாயகன் சக மாணவிகள் மூவரைக்காதலிப்பது தான் கதை.கென் கருணாஸ் சாந்தனு கே பாக்யராஜ் +கருணாஸ் இருவரும் கலந்த சாயலில் இருக்கிறார்.
சத்யா படத்தில் கமல் +அமலா ஜோடி பஸ் படிக்கட்டில் ஜோடியாக வந்தபின் பெரும்பாலான லவ் சப்ஜெக்ட் படங்கள் அதே போல் காட்சியுடன் வருகின்றன.இந்தப்படமும் விதிவிலக்கு அல்ல.
2.சாத்தான் த டார்க் (Sathan The Dark) - ஹாரர் திரில்லர்
"இதுவரை சொல்லப்படாத கதை" என்ற எதிர்பார்ப்புடன் வெளியாகிறது இந்த ஹாரர் திரில்லர். சர்ச்சில் நாயகி பாவ மன்னிப்பு கேட்கும் சீன் உடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. கடவுளே ஆனாலும் அவர் ரத்தத்தை நான் குடிப்பேன் என்று நாயகி பேசுவது மிரட்டலாக உள்ளது.
இயக்கம்: மணிகண்டன் ராமலிங்கம்.
நடிகர்கள்: சாந்தினி தமிழரசன், அய்ரா, மோனா பேத்ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
3. ரேஜ் (Rage) - ரிவெஞ்ச் திரில்லர்
நாயகன் ஒரு டாக்சி டிரைவர்.சென்னையில் இவர் வாடகை டாக்சி ஓட்டும்போது பயணி ஆக அறிமுகம் ஆகும் நாயகியுடன் காதல் மலர்கிறது.இவர்கள் வாழ்க்கையில் வில்லன் குறுக்கிடுகிறான். நாயகன் வில்லனைப்பழி வாங்குவதுதான் கதை.
நடிகர்கள்: புதுமுகங்கள் ஷான் மற்றும் ஷெர்லி பபித்ரா நடித்துள்ளனர். வில்லன்களாக பவன் ஜினோ தாமஸ், விக்ரம் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பருத்திவீரன் சரவணன், முனீஷ்காந்த், காயத்ரி ரெமா நடித்துள்ளனர்.
இசை: விபீன். ஜி.வி. பிரகாஷ் குமார் ஒரு பாடலைப் பாடியுள்ளார். பொள்ளாச்சி, சென்னை மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
4.துரந்தர் பாகம் 2 (Dhuranthar Part 2) - ஸ்பை ஆக்ஷன் திரில்லர் -ஹிந்தி/தமிழ்/தெலுங்கு
முதல் பாகம் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகிறது.
துரந்தர் பாகம் 1 ரிலீஸ் ஆன முதல் 38 நாட்களில் 1000 கோடி வசூலித்த படம்.( பாகம் 1 பாகம் 2 ஆகிய இரு படங்களின் மொத்த பட்ஜெட்டே 475 கோடிகள் தான்.)
துரந்தர் பாகம் 1 உலகம் முழுக்க இதுவரை 1200 கோடி சம்பாதித்துள்ளது.பாகம் 2. முதல் நாள் முன் பதிவில் மட்டும் 200 கோடி சம்பாதித்து உள்ளது.
பாகம் 1 பாகம் 2 ஆகிய இரு பாக மொத்த பட்ஜெட்டே 475 கோடிகள் தான்.
1200 கோடி + 200 கோடி. = 1400 கோடி வசூல்.
நாயகன் பாகிஸ்தானுக்கு ஸ்பை ஏஜெண்ட் ஆகப்போய் வில்லனின் கேங்கில் வேலை பார்த்து அவர்களை ஒழிப்பது தான் கதை.
இந்தப்படத்தில் நாயகனை விட வில்லனுக்கு நல்ல பெயர் கிடைத்தது.வில்லன் வரும் சீன் எல்லாம் தியேட்டரில் கை தட்டல் ஆரவாரம் தான்.
இரண்டாம் பாகத்தில் ரன்வீர் சிங்க்,சஞ்சய் தத் ,மாதவன் ,சாரா அர்ஜூன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.ஆதித்யா தார் இயக்கி இருக்கிறார்.
ட்ரெய்லரைப்பார்க்கும்போது ஒரே அடிதடி ,டமால் டுமீல் ,ரத்தக்களறி ஆக இருக்கிறது.எந்த அளவு வன்முறை தூக்கல் ஆக இருக்கிறதோ அந்த அளவு வசூல் மழை பொழியும் என்பது சினிமாக்காரர்களின் கருத்து.
இது வன்முறைக்காக 'ஏ' (A Certificate)சர்ட்டிபிகேட் பெற்ற படம்.
5.மசூத் கான் பாகம் 1 - த ரேஜ் (Masood Khan Part 1) - ஆக்ஷன் திரில்லர் (தெலுங்கு/தமிழ்)
ஒரு சாதாரண மனிதன் எப்படி லெஜெண்ட் ஆகிறான் என்பதை ஆக்ஷன் திரில்லர் பாணியில் சொல்லும் படம்.
ட்ரெய்லரை பார்க்கும்போது இது ஒரு மந்திர ஜாலப்பேய்ப்படம் போல் தோன்றுகிறது.ஆனால் ஆக்சன் திரில்லர் ஜர்னரில் வெளியாகிறது.
இதிலும் ஒரே ரத்தம் ,வெட்டு ,குத்து ,நர பலி ,அமானுஷ்யம், வன்முறை எல்லாம் உண்டு போல.பூஜா சர்மா நாயகி ஆக நடிக்க கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அசோகா.மாயாஜாலப்படம் என்றாலும் நாயகி துப்பாக்கியுடன் ஆக்சனில் இறங்கும் காட்சியும் உண்டு.
இது ஒரு ஆக்ஷன் படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கும் 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் மட்டும் மார்ச் 20 (வெள்ளி) அன்று வெளியாகிறது.