லோகேஷுக்கு வந்த திடீர் சிக்கல்.. உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு!

Lokesh
Lokesh
Published on

லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக் கோரிய வழக்கில், அவரை பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 5 படங்களில் மெகா ஹிட் இயக்குனராக உருவெடுத்தார்.வெறும் 10 படங்கள் மட்டுமே எடுக்கவுள்ளதாக அறிவித்த லோகேஷ் அடுத்ததாக தலைவர் 170 படத்தில் பிஸியாக இருக்கிறார். விஜய், கமல்ஹாசனை வைத்து படமெடுத்து ஹிட்டான நிலையில், அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து படமெடுக்கவுள்ளார்.

விஜய் நடித்துள்ள லியோ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாகக் கூறி, மதுரையைச் சேர்ந்த ராஜா முருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் லியோபடத்தை ஊடகங்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், விளம்பர நோக்கோடு மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், தணிக்கை துறையின் சான்று பெற்று தான் திரைப்படம் வெளி வந்துள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேநேரத்தில் அதிக வன்முறை காரணமாக S.J.சூர்யா நடித்த "நியூ" திரைப்படம் தடை செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ், சென்சார் போர்டு அதிகாரி மற்றும் மனுதாரர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com