"லால் சலாம்" படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் என லைகா நிறுவனம் அறிவிப்பு!


"லால் சலாம்" படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் என லைகா நிறுவனம் அறிவிப்பு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கேமியோரோலில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் ஏற்கனவே தீயாக பரவியது தான்.

சமீபத்தில் விஷ்ணு விஷால் இருவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறியதாக வதந்திகள் வெளியான நிலையில், அதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் தான் லால் சலாம் படத்தில் கதாநாயகர்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் விஷ்ணு விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டது என்றும் விஷ்ணுவிஷால் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என வதந்திகள் பரவின. இந்நிலையில், இன்றைய போஸ்டரில் தெள்ளத் தெளிவாக விஷ்ணு விஷால் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், அந்த வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள லால் சலாம் படத்தின் அறிவிப்பு வெளியாகி வெகு நாட்கள் ஆன நிலையில், இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என்கிற அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

லால் சலாம் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்திய படமாக உருவாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கிரிக்கெட் கோச்சாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள புதிய போஸ்டரில் கிரிக்கெட் மைதானத்தில் கலவரம் நடப்பது போலவும் கிரிக்கெட் மைதானமே பற்றி எரிவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பல வருடங்களுக்கு பிறகு லால்சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கெளரவ கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. ஆனாலும், இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமாகவே ப்ரோமோட்செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கஉள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com