‘காதலில் பொய் சொல்வதை ஏற்க முடியாது’ நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

‘காதலில் பொய் சொல்வதை ஏற்க முடியாது’ நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

டிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் கதாநாயகியாய் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். இவர், என்ஜிகே, தேவ், ஸ்பைடர், தடையற தாக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை வெகுவாகக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காதலுக்கு அழகு பொய்’ என்று கவிஞர்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், காதலில் பொய் இருப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று கூறி இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், காதல் பற்றிய இவரது அபிப்பிராயம் குறித்த கேள்விக்கு இவர் அளித்த பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. இனி, காதல் குறித்து இவரது அபிப்பிராயத்தைக் காண்போம்.

“காதலில், என்னைப் பொறுத்தவரை ஓர் உறவின் ஒப்பந்தத்தை முறிப்பது பொய் என்று நினைக்கிறேன். நெருக்கமான உறவில் பேச முடியாத விஷயம் என்று எதுவும் கிடையாது. காதலுக்கு முன்பு நண்பர்களாக இருக்கும் அந்த உறவை நான் நம்புகிறேன். காரணம், அந்த உறவில் காதலிக்கும் இருவரும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அப்போது அவர்கள் இருவரிடையே மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் எந்த தயக்கமும் இருக்காது. அப்படியே தவறு செய்தாலும் அதை மறைவின்றி பேசி மனம் விட்டுப் பழகலாம்.

தவறு செய்வது இயல்புதானே. நாம் எல்லோரும் மனிதர்கள்கள். ஆனால், காதலில் செய்த தவறை சொல்லாமல் மறைப்பதுதான் பெரும் பிரச்னை. காதலில் பொய் பேசுவதையும், எமோஷனலாகப் பேசி ஒருவரை மற்றவர் ஏமாற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற வார்த்தையை பலரும் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சில நேரம் நீங்கள் நேசிக்கும் ஒருவரை அவர்கள் விரும்புவதைச் செய்ய அனுமதிக்காமல், உங்களுக்குப் பிடித்ததை அவர்கள் மீது திணித்து அதைத்தான் நீ செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. இதனால் அவர்களை வளர விடாமல் தடுக்கிறார்கள். காதலிக்கும் ஒருவரை மென்மேலும் வளரச் செய்வதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும்” என்று அவர் காதல் குறித்துப் பேசி இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com