பிள்ளைகள் கொல்லவா இத்தனை ஆயுதம்? மதன்கார்க்கி உருக்கம்!

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

போர்  என்ற விஷயம் நாம் ஊடகங்களில் பார்ப்பதை விட மிக மோசமானது. இந்த போரில் குழந்தைகள் அடையும் பாதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது. இந்த பாதிப்பை ஒரு சிறுமியின் பார்வையில் சொல்லுவகையில் எழுதியுள்ளார் பாடலாரிசியர் மதன் கார்க்கி.

தனி இசைக்கலைஞர்களை ஆதரிக்கும் பா மியூசிக் நிறுவனம்    இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி இசையில், பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில் 'அவனிடம் சொல்வேன்' என்ற பாடலை தங்களது  தளத்தில் வெளியிட்டுள்ளது. உலகெங்கும் போரின் தாக்கங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில்,   குழந்தைகளின் வாழ்க்கை எத்தனை பாதிப்புக்குள்ளாகிறது என்பதை ஒரு சிறுமியின் கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்படுத்தும் வகையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளை வடித்துள்ளார். 

இப்போது நடக்கும் பாலஸ்தீனம் - இஸ்ரேல் போர் ஆகட்டும், முன்பு நடந்த ஈழப்போர் ஆகட்டும் அல்லது வேறு எந்த போரிலும் முதலில் பாதிகப்படுவது குழந்தைகள் தான் போரில் சொல்லப் படாத குழந்தைகளின் வலியை சொல்லு பாடலாக மட்டும் இல்லாமல் ஒரு மனதின் குமுறலாக வந்துள்ளது 'அவனிடம் சொல்வேன் 'பாடல் வெளியான சில மணிநேரங்களில் பலரை சென்றடைந்து உள்ளது. இந்த பாடல் அனைவரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி, போர் நிறுத்தப்பட வேண்டும் என பிராத்திப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com