'மாமன்னன்' முதல்நாள் வசூல் : இத்தனை கோடியா!
ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநித நடித்துள்ள படம் 'மாமன்னன்'. 29ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் 3வது படமாக உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தில், உதயநிதியுடன், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
'பரியேரும் பெருமாள்', 'கர்ணன்' படங்களில் ஆதிக்க சாதியினரால் பட்டியலின மக்களுக்கு நிகழ்த்தப்படும் அடக்கு முறைகள் பற்றி பேசியிருந்த இயக்குநர், 'மாமன்னன்' படத்தில் கட்சிகளில் ஜாதி அரசியல் மையமாக இருப்பது பற்றி காட்சிப்படுத்தியுள்ளார்.
வடிவேலுவின் குண சித்திர கதாபாத்திரம், ஜாதியை ஏற்று கொள்ளாத ஒரு சம கால இளைஞராக உதயநிதியின் நடிப்பு என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் உயர்ந்து நிற்கிறது.
இப்படம் தற்போது 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் நிலையில், இப்படம் முதல்நாளில் 5.50 கோடி முதல் 6 கோடி வரையிலும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் உதயநிதி கேரியரில் நல்ல ஓப்பனிங்கை கொடுத்துள்ள படமாக 'மாமன்னன்' அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

