திகில் கிளப்பும் ஷைத்தான் படத்தை விலைக்கு வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!

Shaitaan
Shaitaan

திகில் காட்சிகள் நிறைந்த ஷைத்தான் பட ட்ரைலர் வெளியாகி மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் அதன் ஓடிடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் தனக்கேற்ற கதாபாத்திரங்கள் வருவதில்லை என கூறிய ஜோதிகா, மற்ற மொழிப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான 'காதல் தி கோர்' படம் பாராட்டுகளைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வந்தார். தற்போது பிறமொழி படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரது நடிப்பில் அடுத்ததாக 'ஷைத்தான்' என்ற பாலிவுட் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை சூப்பர் 30, கானாபத் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கியுள்ளார். இதில் அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அஜய் தேவ்கன் தயாரித்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி திகில் கிளப்பியது.

இதையும் படியுங்கள்:
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் பிரேமலு... படம் எப்படி இருக்கு தெரியுமா?
Shaitaan

அனைத்து படமும் தற்போது ஓடிடியில் அதிகம் கவனம் பெற்று வருகிறது. திரையரங்கு ரசிகர்களை போலவே ஓடிடிக்கும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த நிலையில் ஷைத்தான் படம் குறித்த ஓடிடி அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீதான மக்கள் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளதால் பெரும் தொகைக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைத்தானைத் தொடர்ந்து மேலும் அதிக இந்திப் படங்களில் நடிக்க ஜோதிகா திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com