45 அடி உயரத்தில் மஹா காளி செட்  ‘பீஷ்ம பருவம்’ படத்தில் அபூர்வம்!

45 அடி உயரத்தில் மஹா காளி செட் ‘பீஷ்ம பருவம்’ படத்தில் அபூர்வம்!

மிழில் இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளியான  ‘கருங்காலி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அதைத் தொடர்ந்து தெலுங்குத் திரையுலகில் அடி எடுத்து வைத்து மந்த்ரா-2, ராஜு காரி கதி, பெல்லிக்கி முந்து பிரேமகதா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார்.

புன்னகைப் பூவே, கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவேரி கல்யாணி இப்போது இயக்குனராக மாறித் தமிழ், தெலுங்கில் இயக்கியுள்ள பான் இந்திய படமாக உருவாகியுள்ள ‘புரொடக்சன் நம்பர் :1 என்கிற படத்திலும் சேத்தன் சீனு நடித்து முடித்திருக்கிறார்.

தற்போது பிஎம்கே இண்டர்நேஷனல் மற்றும் சிசி புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘பீஷ்ம பருவம்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சேத்தன் சீனு. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் துவக்க விழா பூஜை மார்ச், 10ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. மேலும் இன்றே படப்பிடிப்பும் துவங்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக தற்போது 45 அடி உயரமுள்ள மகாகாளி செட் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கே 150 நடன கலைஞர்கள் பங்கு பெறும் நடனக்காட்சி ஒன்றும் அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட நூறு சண்டைக் கலைஞர்கள் பங்கு பெறும்ஆக்சன் காட்சியும் படமாக்கப்பட இருக்கிறது.

25 நாட்கள் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் உழைப்பில் இந்த பிரம்மாண்ட மகாகாளி செட் உருவாகி உள்ளது. புராண காலத்து பின்னணியில் ஆக்சன் கலந்த கதை அம்சத்துடன் இந்த படம் உருவாகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com