
தெலுங்கு உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இந்நிலையில், இவரது 'SSMB28' படத்தின் டைட்டில் அதிரடி வீடியோவுடன் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு, 2017ம் ஆண்டு, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியான 'ஸ்பைடர்' திரைப்படத்தின் மூலம் தமிழிலும் பிரபலமாக அறியப்பட்டார். அதன்பின் அவரது படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில் தமிழிலும் அவரது படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில், அவரது அடுத்த படமான 'ssmb28' படத்தின் டைட்டில் வீடியோவுடன் தற்போது வெளியாகியுள்ளது.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு 'குண்டூர் காரம்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மகேஷ் பாபு, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிவரும் இப்படத்தின் டைட்டில் வீடியோ மகேஷ் பாபு ரசிகர்களாலும், வெகுஜன ரசிகர்களாலும் வெகுவாக கவரப்பட்டுள்ளது.
இப்படத்தில் மகேஷ் பாபுவுடன், பூஜா ஹெக்டே, ஸ்ரீ லீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஹரிகா & ஹாசினி க்ரியேஷன்ஸ் பேனரின் கீழ் எஸ்.ராதா கிருஷ்ணன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்க, பிஎஸ் வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படம் 2024ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி பொங்கல் திருநாளையொட்டி திரைக்கு வரவிருக்கிறது.