இணையத்தை கலக்கும் The Goat படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் மேக்கிங் ஸ்டில்!

GOAT
GOAT

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்ற ஆண்டே வெளியிடப்பட்டது. அந்தப் போஸ்டரின் மேக்கிங் ஸ்டிலை தற்போது படக்குழு வெளியிட்டதை அடுத்து அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'தி கோட்' படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு எங்கெங்கே நடக்கிறது, எப்படி நடக்கிறது போன்றவையெல்லாம் லைவாக அப்டேட் ஆவதுபோல், ரசிகர்களுக்கு அப்டேட் ஆகிறது. அதேபோல் படக்குழுவும் தொடர்ந்து ரசிகர்களுடன் அப்டேட்டில் இருந்து வருகிறது.

அந்தவகையில் சென்ற சில தினங்களாகப் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வந்தது. அப்போது கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் அவ்வளவு உற்சாகத்துடன் விஜயை வரவேற்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டனர். அதேபோல் விஜயும் அவர்களுக்காக நேரத்தை ஒதுக்கி உரையாற்றுவது போட்டோக்கள் எடுத்துக்கொள்வதுப் போன்றவற்றைச் செய்தார்.

இதனையடுத்து இப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக அடுத்த மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் மாஸ்கோவில் தொடங்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கொஞ்ச நாட்கள் ஓய்வுக்குப் பின் அடுத்த மாதம் முதல் வாரத்தில் படக்குழு மாஸ்கோ செல்லவுள்ளனர். அங்கு இரண்டு வாரங்கள் ஷூட்டிங்கைத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தி கோட் படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதன் போஸ்டர் சென்ற ஆண்டே வெளியாகி, அப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்தது. அந்த போஸ்டரில் இரண்டு விஜய்களும் கைகளை அடித்துக்கொள்ளும்படி போஸ்டர் அமைதிருந்தது.

இதனையடுத்து தற்போது அந்தப் போஸ்டரின் மேக்கிங் ஸ்டில்லைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது இந்த மேக்கிங் போஸ்டரில் விஜய் ஒரு கையை நீட்டியிருந்தார். அதன் மற்றொரு பக்கம் விஜயின் கையை அடிப்பது போல வெங்கட் பிரபு கையை நீட்டியிருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் படத்தின் போஸ்டரை விட இந்த மேக்கிங் போஸ்டரையே அதிகம் லைக் செய்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
"இது தானா சேர்ந்த கூட்டம்" விஜய்யின் செல்ஃபி வீடியோவில் அலப்பறை செய்த ரசிகர்கள்!
GOAT

ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற இந்தப் படத்தில் ஸ்னேகா, லைலா, பிரசாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். தி கோட் படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பை வைத்திருக்கும் சமையத்தில் தற்போது இந்தத் தொடர் அப்டேட்களால் எதிர்பார்ப்புகளும் கொண்டாட்டங்களும் கூடி வருகிறது என்றே கூற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com