மோகன்லால் முதன்முதலில் இயக்கும் ’Barroz’ திரைப்படத்தின் புதிய அப்டேட்!

’Barroz’
’Barroz’

லையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் முதல் முறையாக இயக்கியுள்ள ’Barroz’ படத்தின் புதிய அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என மோகன்லால் தனது X தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

மோகன்லால் 1978ம் ஆண்டு Thiranottam என்ற மலையாள படத்தில்தான் நடிகராக அறிமுகமானார். ஆனால் அப்படம் சில பிரச்சனைகளால் பல ஆண்டுகள் வெளியிடாமல் இருந்தது. அதன்பின்னர் 2003ம் ஆண்டுதான் அந்த படத்தை வெளியிட்டனர். பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷன் விருதுகளை வாங்கிய இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாள சினிமாவில் இதுவரை மோகன்லால் 20 படங்களைத் தயாரித்திருக்கிறார். 1990ம் ஆண்டு Pranavam ஆர்ட்ஸ் International என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் 2008ம் ஆண்டு Maxlab cinema and entertainment என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பின்னர் 1991ம் ஆண்டு கோபுர வாசலிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். சிறைச்சாலை என்ற படத்தில் பிரவுடன் இணைந்து நடித்திருந்தார்.

2009ம் ஆண்டு நடிகர் கமலஹாசனுடன் இணைந்து ’உன்னைப்போல் ஒருவன்’ என்ற படம் நடித்தார். அதன்பின்னர் 2014ம் ஆண்டு ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த மோகன்லால் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். 2019ம் ஆண்டு சூர்யா நடித்த காப்பான் படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் திரைப்படத்தில் Cameo ரோலில் வந்து அசத்தியிருப்பார்.

இந்த ஆண்டு இறுதியில் மலையாளத்தில் மோகன் லால் நடித்த நேரு திரைப்படம் வெளியாகும் எனத் தகவலைப் படக்குழு அறிவித்தது. அதேபோல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படம் வெளியாகிறது. இதனையடுத்து மோகன்லால் முதல் முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள Barroz படத்தி அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என மோகன்லால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மோகன்லால் முதன் முதலில் இயக்கிய இந்த படத்தில் அவரே நடித்திருக்கிறார். Barroz திரப்படம் புதயலை பற்றிய ஃபாண்டாஸி மூவியாக இருக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான பணிகள் கடந்த 2021ம் ஆண்டே தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாகச் சிறிது காலம் வேலைகள் தள்ளிவைக்கப்பட்டது.Barroz படத்தில் சில காட்சிகள் ப்ரித்வி ராஜ் நடித்தார் ஆனால் அந்த காட்சிகளை நீக்கியதாக செய்திகள் வெளியானது.

Barroz படத்தை எழுதியது ஜிஜோ புன்னூஸ். ஆஷிர்வாத் சினிமாஸ் தயாரித்த இந்த படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் வெளியிடும் தேதி நாளை மாலை 5 மணிக்கு அப்டேட்டாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com