பிரம்மாண்டமாக நடந்த சுரேஷ் கோபி மகள் திருமணம்.. வைரலாகும் போட்டோஸ்!

Suresh Gopi daughter marriage
Suresh Gopi daughter marriage

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி, நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. மோகன்லால், மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் சுரேஷ் கோபிக்கு இருக்கிறது. பாஜகவைச் சேர்ந்தவரான இவர், குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பயணத்தைத் தொடங்கி, இதுவரை சுமார் 250 படங்கள் வரை நடித்துள்ளார்.

தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த தீனா படத்தில், நடிகர் அஜித்துக்கு அண்ணனாக சுரேஷ் கோபி நடித்து பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தமிழில் சரத்குமாருடன் சமஸ்தானம் , விக்ரமின் ஐ, விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர் சுரேஷ் கோபி. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து ராஜ்ய சபா எம்.பி ஆக கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், இவரின் மகள் பாக்யா சுரேஷின் திருமண விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இணையத்தை ஆக்கிரமித்த சுரேஷ் கோபியின் மகள் திருமண புகைப்படங்களுக்கு காரணம் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று திருவிழா கோலம் பூண்டதுதான். மலையாள சினிமாத் துறை மட்டுமில்லாமல் பிற திரைத் துறையின் உச்ச நட்சத்திரங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

Suresh Gopi daughter marriage
Suresh Gopi daughter marriage

மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார் குறிப்பாக மம்மூட்டி தனது மனைவி சுல்ஃபத் உடனும், மோகன்லான் தனது மனைவி சுசித்ராவுடனும் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com