Malaikottaivaliban
Malaikottaivaliban

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லாலின் ’மலைகோட்டை வாலிபன்’ டீசர் வைரல்!

மிழில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது ’மலைகோட்டை வாலிபன்’. தற்போதுவரை இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் நடிப்பில் மலையாள மொழியில் ’மலைகோட்டை வாலிபன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ். இவரின் முந்தைய படங்களான ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ போன்ற பல படங்களை இயக்கி கவனம் பெற்றவர்.

இந்நிலையில் தற்போது மோகன்லால் வைத்து ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மோகன்லால் உடன் மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com