இரண்டு மலையாள இயக்குனர்கள் கோலிவுட்டில் அறிமுகம்!

2018.
2018.
Published on

மலையாளப் படங்களின் அடுத்தடுத்த வெற்றிகளைத் தொடர்ந்து இரண்டு மலையாள இயக்குனர்கள் ஒரே நேரத்தில் கோலிவுட்டில் களமிறங்கவுள்ளனர். தமிழக ரசிகர்களின் அன்புடனும் எதிர்பார்ப்புடனும் அவர்களைக் கோலிவுட்டில் வரவேற்கின்றனர். இதனையடுத்து இணையத்தில் வைரலாகிறது 2018 படம்.

சென்ற ஆண்டு மே மாதம் வெளியானப் படம் 2018. இப்படம் கேரளாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் பெரிய ஹிட்டானது. ஜூட் அந்தானி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான இப்படம், 2018ம் ஆண்டு கேரளாவை உலுக்கிய வெள்ளத்தின் பேரழிவைப் பற்றிய உண்மைக் கதையாகும். இப்படம் உலகளவில் வெறும் 11 நாட்களில் 100 கோடி வசூலை ஈட்டியது. இதுதான் மலையாள சினிமாவின் உச்சக்கட்ட சாதனையாகும். இதன்பின்னரே மோகன் லாலின் லூசிஃபர் படம் 12 நாட்களில் 100 கோடி வசூலைத் தாண்டியது.

இந்த இரண்டாவது சாதனையை இப்போது மஞ்சுமெல் பாய்ஸ் படம் தட்டிச் சென்றது. இப்படமும் வெறும் 11 நாட்களில் 100 கோடியைத் தாண்டியுள்ளது. 2006ம் ஆண்டு குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தைத் தழுவி எடுத்த இப்படம் கேரளாவைவிட தமிழகத்திலேயே அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது.

2018 மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் ஆகிய படங்கள் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக சாதனைப் படைத்தது. ஆகையால் இந்த இரண்டுப் படங்களின் இயக்குனர்களையும் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டனர். அந்தவகையில் மஞ்சுமெல் பாய்ஸின் படத்தின் வெற்றியைச் சரியான நேரமாக எண்ணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் 2018 படத்தின் இயக்குனர் ஜூட் அந்தானி லைகா நிறுவனத்தின் பேனரில் அடுத்தப் படத்தை இயக்கயவுள்ளார். இதுவே தமிழில் அவர் எடுக்கப் போகும் முதல் படமாகும். அதேபோல் மஞ்சுமெல் பாய்ஸின் இயக்குனர் சிதம்பரம் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் படம் இயக்கி கோலிவுட் சினிமாவில் கால் பதிக்கவுள்ளார்.

இதையும் படியுங்கள்:
Oscar 2024: விருதுகளை அள்ளிச் சென்ற Oppenheimer மற்றும் Poorthings படங்கள்!
2018.

இதனையடுத்து தமிழ் ரசிகர்கள் தரமான இயக்குனர்களைக் கோலிவிட்டில் இறக்கியுள்ளதால் தரமான படங்களை எதிர்பார்க்கலாம் என்றுக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதனால் 2018 படம் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com