அடுத்தடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்யப்போகிறார் மணிரத்னம்! எல்லாம் பொன்னியின் செல்வன் அதிர்ஷ்டம்!

அடுத்தடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்யப்போகிறார் மணிரத்னம்! எல்லாம் பொன்னியின் செல்வன் அதிர்ஷ்டம்!

கோலிவுட்டின் பொக்கிஷமாக கருதப்படும் இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் மணிரத்னம். இவரது படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை பேசும். அதிலும் காதலைச் சொல்வதில் அவரது பாணியும் ரசிக்கும்படி இருக்கும். அவரது இயக்கத்தில் வெளிவந்த ரோஜா முதல் இப்போது பொன்னியின் செல்வன் வரையிலும் அதை அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்.

காதல் மட்டுமல்லாமல் வித்தியாசமான கதைக்களமானாலும் சரி, சரித்திரக் கதையானலும் சரி அதை திரைப்படமாக உருவாக்குவதில் மணிரத்னம் திறமையானவர் என்பதை, தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பேராதரவைப் பெற்றுவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகமே உணர்த்தியிருக்கும். வரும் ஏப்ரல் மாதம் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தால் தற்போது மணிரத்னம் மிகவும் பிஸியாகிவிட்டார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். கமல்ஹாசனின் 68வது பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பு வெளியானதில் ரசிர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

35 வருடங்களுக்கு மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியான 'நாயகன்' திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மீண்டும் இவர்கள் கூட்டணி என்றதும் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கிளம்பி உள்ளது.

இது மட்டுமா... உலக நாயகனைத் தொடர்ந்து அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அதற்கடுத்த படத்தை இயக்கப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியிலும் 1991ல் தளபதி படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றதும் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.

இதற்கான கதை குறித்து ரஜினியும் மணிரத்னமும் ஆலோசித்து வருவதாகவும், இந்த படத்திற்கான அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் எனவும் தகவல்கள் அறியப்படுகிறது.

இத்தனை வருடம் கழித்து இந்த இரண்டு பிரம்மாண்ட நாயகர்களோடு மீண்டும் கூட்டணி என்ற விஷயம் மணிரத்னத்தை பிஸியாக்கியதோடு மட்டுமல்லாமல், இந்த தகவல் ரசிகர்ளாகிய நமக்கும் பெரிய எதிர்பார்பை கிளப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com