“நான் ரொம்ப குண்டா இருக்கேன்னு பலர் என்னை கேலி செய்கிறார்கள்” – உலக அழகியே வேதனை!

Aiswarya Rai
Aiswarya Rai
Published on

உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான் குண்டாகிவிட்டதால், பலர் தன்னை உருவக்கேலி செய்கின்றனர் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

உலக ஐஸ்வர்யா ராய் ஒருகாலத்தில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர். பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான இவர் பிரசாந்துடன் ஏராளமான படங்கள் நடித்திருந்தார். இவரின் அழகை ரசிக்காதவர்கள் இல்லவே இல்லை. அதேபோல் அவரும் தன் உடல் வடிவத்தையும் தனது அழகையும் பராமரித்து வந்தார். அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு ஆராத்யா என்ற மகளும் உள்ளார்.

சில காலங்களாக அவர் பச்சன் குடும்பத்தை விட்டு தனியாகவே இருக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் கூட பச்சன் குடும்பத்தைவிட்டு தனியாகவே தனது மகளுடன் வருகைத் தருகிறார். அதேபோல், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வராய் ராய் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக சொல்லப் படுகிறது. அதேபோல், விரைவில் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஆராத்யா எப்போது தனது தாயுடனே இருக்கிறார். பச்சன் குடும்பத்துடன் அவர் தொடர்பில் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

கடைசியாக ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மீண்டும் கோலிவுட்டில் கம்பேக் கொடுத்தார். சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விருது வென்றார். அப்போது அவரை ஆராத்யா கட்டித் தழுவிய வீடியோ வைரலானது.

இதனையடுத்து தற்போது தனது உருவக்கேலி குறித்து வாய்த்திறந்திருக்கிறார்.

மகள் ஆராத்யா பிறந்த பிறகு உடல் எடை கூடியதற்காக சிலர் அவரைக் கேலிக்குட்படுத்தியதாக கூறிய அவர், இதைப் பற்றி தனக்கு கவலை இல்லை என தெரிவித்தார். அதேசமயம், உடல் எடையை குறைத்துக்கொள்வது குறித்து எப்போதும் மிகுந்த கவனத்தை செலுத்துவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் வெளியாகப் போகும் பாகிஸ்தான் திரைப்படம்! எப்போ தெரியுமா?
Aiswarya Rai

தாயான பிறகு பெண்கள் உடலில் நிறைய மாற்றங்களை அனுபவிக்கின்றனர், இது இயற்கையானது என்று நடிகை ஐஸ்வர்யா கூறினார். சமூகத்தின் உருவக்கேலி எவ்வளவோ மோசமானது என்பதையும், தாய்மை என்ற புனிதமான பயணத்தில் உடல் எடை என்பது சற்றே  சாதாரணமான ஒரு பகுதி மட்டுமே என்பதையும் உணர்த்தினார்.

இது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில், தாயான பிறகு பெண்கள் தங்கள் உடல் எடையை குறைக்கவே நினைப்பார்கள். அப்படியில்லாமல் அதனை மனதார ஏற்றுக்கொள்ளும்படி இவர் பேசியதை ரசிகர்கள் வரவேற்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com