கமல் 234 படத்தில் முன்னணி நடிகர்கள்? கசிந்த தகவல்!

கமல் 234வது படம்
கமல் 234வது படம்

கமல்ஹாசனின் 234வது படத்தில் த்ரிஷா, ஜெயம்ரவி, துல்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் 234வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். நாயகன்படத்துக்குப் பிறகு, 37 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைகின்றனர். இதனால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

த்ரில்லர் கதையைக் கொண்ட இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கமல்ஹாசனின் 234 வது படமான இதில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் ஜெயம் ரவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் துல்கர் சல்மானும் இதில் இணைந்துள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே திரிஷாவும், ஜெயம்ரவியும் பொன்னியின் செல்வன் படத்தில் பட்டைய கிளப்பிய நிலையில், மீண்டும் இந்த படத்தில் நடித்துள்ளனர். பல முன்னணி நடிகர்கள் ஒன்றாக நடிப்பதால் ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்ற நிலையில், நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதையடுத்து, ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இவரின் 234வது படம் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அடுத்தடுத்த படம் வெளிவர இருப்பதால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com