Marakuma nenjam
Marakuma nenjamImge credit: dtnext

ரக்ஷனின் ‘மறக்குமா நெஞ்சம்‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on

ரக்ஷன் நடிப்பில் உருவாகி வரும் மறக்குமா நெஞ்சம் படத்தின் ரிலிஸ் தேதி அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது.

ராகோ. யோகேந்திரன் இயக்கத்தில் சென்ற ஆண்டு முதல் உருவாகி வரும் மறக்குமா நெஞ்சம் படத்தில் ரக்ஷன், தீனா ஆகியோர் நடித்துள்ளனர். ரக்ஷன் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். அதன்பின்னர் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் துல்கர் சல்மானுக்கு நண்பராக நடித்த ரக்ஷனின் கதாப்பாத்திரம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது என்றே கூற வேண்டும். அந்தவகையில் மறக்குமா நெஞ்சம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்ற ஆண்டு மே மாதம் வெளியானது.

கடந்த ஆண்டு ஜூலை மாதமே படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில், சில காரணங்களால் வெளியாகவில்லை. இருப்பினும் படத்தின் ட்ரெய்லர் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. ட்ரெய்லர் மூலம் இப்படம் ஒரு பள்ளி வாழ்க்கைப் பற்றிய படம் என்பது தெரிய வந்தது. மேலும் இப்படத்தில் பள்ளியில் ஏற்படும் காதல், பிரிவு, மீண்டும் 10 வருடங்கள் கழித்து ரீயூனியன், அந்த 10 வருடங்களில் அப்படியே இருக்கும் ரக்ஷன், தீனா நட்பு என அனைத்து வகையிலும் பார்ப்பதற்கு ஒரு கேரளா படம் போல் உள்ளது.

மறக்குமா நெஞ்சம் படத்தில் ஸ்வேதா வேனுகோபால், மலினா, அருன் குரியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.  மேலும் இப்படத்தை ரகு எள்ளுரு தயாரித்துள்ளார். படத்திற்கு சச்சின் வாரியர் இசையமைத்திருக்கிறார் மற்றும் தாமரை பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மறக்குமா நெஞ்சம் படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு. இப்படம் வரும் பிப்ரவரி 2ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஒரு வருட காத்திருப்பு ஒரு வழியாக முடிவடைய உள்ளது. மேலும் இப்படம் ரக்ஷனைக் கதாநாயகனாக தூக்கிவிடும் படம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரக்ஷன் ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகின. இதனால் அவரின் சினிமா பயணம் நன்றாக தொடங்கியிருக்கிறது என்பதே உண்மை.

இதையும் படியுங்கள்:
விஜய்யின் GOAT.. ரிலீஸ் தேதி எப்போது? வெளியான அப்டேட்!
Marakuma nenjam

மறக்குமா நெஞ்சம் படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு வெளியானதால் இப்படம் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com