'மார்கழித் திங்கள்' திரைப்பட நிகழ்ச்சி:சிவாஜி குறித்து சிவகுமார் சொன்ன ரகசியம்!

MargazhiThingal
MargazhiThingal

னோஜ் பாரதி ராஜா இயக்கத்தில் பாரதி ராஜா மற்றும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் மார்கழித் திங்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.இயக்குநர் சுசீந்திரன் தயாரித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியிட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சீமான்,பாரதி ராஜா,சிவகுமார், கார்த்தி உட் ப்பட பலர் கலந்து கொண்டார்கள். 

இந்த விழாவில் பேசிய சீமான் "தம்பி மனோஜ் நீ வெற்றி பெற ஒரு விஷயம் சொல்கிறேன். நீ எடுக்கும் படங்களில் அப்பா பாரதி ராஜாவை பின்பற்றாதே. உனக்கான பாணியை உருவாக்கி கொள். கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.அப்பாவின் காலம் வேறு இப்போது இருக்கும் காலம் வேறு என்பதை புரிந்து நடந்து கொள்" என்றார். 

நடிகர் சிவகுமார் பேசும் போது "உங்களுக்கு தெரியாத ரகசியம் ஒன்றை சொல்லப் போகிறேன். முதல் மரியாதை படத்தில் சிவாஜி அவர்கள் மேக் அப் போட்டு உட்கார்ந்து இருந்தார். சிவாஜியின் மேக் அப்பை பார்த்த பாரதிராஜா, பேக் அப் சொல்லிவிட்டார். சிவாஜி கொஞ்சம் பதறிப்போய் விட்டார். ஒரு காட்சி கூட எடுக்காமல் பேக் அப் சொல்லிவிட்டாரே என்று வருத்தப்பட்டார். மறுநாள் குளித்து விட்டு வந்த சிவாஜியிடம் இப்படித் தான் நீங்க இருக்கணும்னு சொல்லி துளி கூட ஒப்பனை இல்லாமல் எடுத்தார் பாரதி ராஜா.

நடிகர் சிவக்குமார்
நடிகர் சிவக்குமார்

நான் நடக்கறதையும், என் கண் அசைவையும் எடுக்கிறானே இது சரியா வருமா? என்று சந்தேகத்துடனே இருந்தார் சிவாஜி. சிவாஜி அவர்களின் சந்தேககத்திற்க்கு மாறாக முதல் மரியாதை வெற்றி பெற்றது.மனோஜ், என் பையன் கார்த்தியின் நெருங்கிய நண்பன். மனோஜ் வெற்றி என் மகனின் வெற்றியை போன்றது." என்றார்.       "இது ஒரு காதல் கதை. இளையராஜா படத்திற்கு இசை அமைக்க வேண்டும். அப்பாவின் நடிப்பின் பின்னணியில் ராஜா சாரின் இசை ஒலிக்க வேண்டும் என்ற என் எண்ணம் ஈடேறிவிட்டது.30 ஆண்டுகளுக்கு பின் இருவரையும் இணைத்த மகிழ்ச்சி எனக்கு. அப்பாவிடம் இப்படி நடிக்க வேண்டும் என்று சொன்னால் டேய் எனக் கேவா? என்பார். இப்ப எல்லாமே மாறி போச்சு என்பேன். அதற்கு அப்பா என்னமோ சொல்ற சரி என்பார்" என்கிறார் மனோஜ் பாரதி ராஜா 

பாரதி ராஜா அவர்கள் பேசும் போது "என் பையன் இயக்கும் படத்தை பற்றி நானே பேசுவது சரியாக இருக்காது.படத்தின் வெற்றி விழாவில் பேசுகிறேன் "என்றார். மார்கழித் திங்கள் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com