
பிரபல ஓடிடித் தளமான அமேசான் பிரைமில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் அதிக அளவிலான வசூலை அள்ளி சாதனை படைத்திருக்கிறது மார்க் ஆண்டனி திரைப்படம். நடிகர் விஷால் நடிப்பில் மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய திரைப்படமாக மார்க் ஆண்டனி கருதப்படுகிறது.
இந்த திரைப்படத்தை வினோத் தயாரிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் சுனில், செல்வராகவன்ஃ கிங்ஸ்லி, ஒய் ஜி மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
90 களுக்கு முன்பு இருந்த கேங்ஸ்டார்களினுடைய வாழ்க்கை வரலாற்றை டைம் டிராவல் என்ற கற்பனை மூலமாக மிகவும் நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஆதித் ரவிச்சந்திரன். மார்க் ஆண்டனி படத்தில் எஸ் ஜே சூர்யாவினுடைய நடிப்பு படத்தினுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதுவே இன்று இளைய தலைமுறை மத்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை பெறுமளவில் கொண்டு சென்றது.
இந்த நிலையில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படம் பிரபல ஓடிடித் தளமான அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தற்போது வெளியாகி உள்ளது.