மலையாளத்தில் மாஸ் படமா? தமிழிலும் மாஸா ஜெயிக்குமா...?

மலையாளத்தில் மாஸ் படமா? தமிழிலும் மாஸா ஜெயிக்குமா...?

பிரித்விராஜ் சுகுமாரன் நடிக்கும் 'கடுவா'திரைப்படம் தமிழில் நாளை மார்ச்சு 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மலையாளத்தில் வெளியான திரைப் படம் "கடுவா". பிருத்விராஜின் நடிப்பில் இயக்குநர் ஷாஜி கைலாஸ் இயக்கிய இந்தப் படத்தில் சம்யுக்தா நாயகியாக நடித்திருந்தார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து படக்குழு தமிழில் வெளியிட முடிவு செய்தது. இந்நிலையில் இந்தப் படம் நாளை மார்ச்சு 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தில் குறியாச்சான் என்கிற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருத்திருந்தார் பிரித்விராஜ் சுகுமாரன் . உணர்ச்சி மிகு கதாப்பாத்திரங்கள், ஈகோ , க்ரைம், த்ரில்லர், ஜாலியான காதல் படங்கள், மாஸ் படங்கள் என எந்த வகையான சினிமாக்களை எடுத்துக்கொண்டாலும் பிரித்விராஜ் மாஸ் காட்ட கூடியவர். அந்த கதாப்பாத்திரங்களோடு பொருந்திப் போகக் கூடியவர்.

மலையாளத்தில் வெளியான கடுவா படத்துக்கு ஜினு ஆப்ரஹாம் கதை வசனம் எழுத, ஷாஜி கைலாஷ் இயக்கியிருக்கிறார். பிரபலமான மலையாள இயக்குநரான இவர், தமிழில் விஜயகாந்தின் 'வாஞ்சிநாதன்', அஜித்தின் 'ஜனா', 'எல்லாம் அவன் செயல்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது 'கடுவா'. மலையாள சினிமாவை எடுத்துக்கொண்டால் அதிலிருக்கும் மாஸ் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி எண்ணக்கூடிய படங்களில் ஒன்றாக இந்தப் படம் உருவாகியிருந்தது.

கடுவா படத்தை எடுத்துக்கொண்டால் அதன் மொத்த பலமும் அதன் கதை தான். இருதரப்பினருக்கும் இடையேயான மோதலை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com