Pirai Thedum
Pirai Thedum

விவாகரத்து பாடலாக மாறிய 'பிறை தேடும் இரவிலே'... ஏன் தெரியுமா?

Published on

பிறை தேடும் இரவிலே பாடலில் வேலை பார்த்த 4 பேருக்கும் விவாகரத்து ஆனதால் இந்த பாடல் டைவர்ஸ் பாடல் என இணையத்தில் டிரண்டாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளுக்கு பஞ்சமில்லை. அது போல ஓரு செகண்டில் காதல் வந்தும் பட் என்று திருமணத்தை முடித்துக் கொண்டு உடனே டைவர்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர் நடிகைகளின் வரிசையில் தற்போது ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடம் பிடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஒரு பாடலுக்காக வேலை செய்த நான்கு பேருமே விவாகரத்து பெற்றிருக்கக் கூடிய நிலையை கண்டறிந்திருக்கும் ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் பள்ளியில் படிக்கும் போதே காதலித்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு 10 வருடம் திருமணம் செய்து கொண்ட ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடிக்கு அண்மையில் தான் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் திடீரென பிரியப்போவதாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த இரண்டு ஜோடிகளும் இணைந்து காதலர்கள் கொண்டாட கூடிய பாடல்களை பாடி அசத்தியதோடு ஜி.வி பிரகாஷ் இசையிலும் கலக்கியிருப்பார். அந்த வகையில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்த ஏராளமான பாடல்களை சைந்தவி பாடி இருக்கிறார். குறிப்பாக விழிகளில் ஒரு வானவில், எள்ளு வய பூக்கலையே, ஆருயிரே ஆருயிரே, யாரோ இவன் யாரோ, வெண்மேகம் போலவே நீ என அடுக்கிக் கொண்டு போகலாம்.

இதையும் படியுங்கள்:
"விஜயகாந்த ரொம்ப மிஸ் பண்றேன்" ரஜினிகாந்த் உருக்கம்!
Pirai Thedum

நடிகர் தனுஷை வைத்து அவரது சகோதரன் செல்வராகவன் இயக்கிய படம் தான் மயக்கம் என்ன. 2011ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் இடம் பிடித்த பிறை தேடும் இரவிலே என்ற பாடலை தனுஷ் எழுத, அந்த பாடலுக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, இந்த பாடலை சைந்தவி பாடியிருப்பார். காதலர்களின் ஃபேவரைட் பாடலாக இருக்கும் இந்த பாடல் அவர்களின் பர்சனல் பாடலாகவும் திகழ்ந்தது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்தப் பாடலுக்காக வேலை செய்த நான்கு பேருமே விவாகரத்து பெற்றிருக்கக் கூடிய விஷயத்தை ரசிகர்கள் கண்டறிந்து தற்போது இணையத்தில் வைரலாக்கி விட்டார்கள். அந்த வகையில் இந்த படத்தை இயக்கிய செல்வராகவன் முதலில் சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். இதனை அடுத்து தனுஷ் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து தேவை என தற்போது நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்.

அத்துடன் இந்த லிஸ்டில் ஜி.வி பிரகாஷ், சைந்தவியும் இணைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் அழகான பாடலை உருவாக்கித் தந்த இந்த நான்கு பேருக்கும் விவாகரத்து நடந்திருப்பது நினைத்து இந்த பாடலில் ஒரு சோகமான ஒற்றுமை இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கூறியிருக்கிறார்கள். தற்போது இந்த விஷயம் தான் இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

logo
Kalki Online
kalkionline.com