விமர்சனம்: ‘மெய்யழகன்’ - இவனை ரசிக்க பொறுமை  வேண்டும்!

Meiyazhagan Movie Review
Meiyazhagan Movie Review
Published on
ரேட்டிங்(3 / 5)

டுத்தர வயதில் இருக்கும் ஆண்கள், தான் இளம் வயதில் காதலித்த பெண்ணை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் என்ன பேசுவது? கடந்த கால மறக்க முடியாத விஷயங்களைப் பேசுவதா? அல்லது சமகால யதார்த்தைப் பேசுவதா? என்ற குழப்பம் ஏற்படும். இதுபோன்ற அழகான காட்சியை டைரக்டர் பிரேம்குமார் ‘மெய்யழகன்’ படத்தில் வைத்திருக்கிறார். கார்த்தி, அரவிந்த் சுவாமி இணைந்து   நடித்துள்ள இப்படத்தை சூர்யா - ஜோதிகா தயாரித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் நீடாமங்கலத்திற்கு  22 ஆண்டுகளுக்கு பின்பு வருகிறார் அருள்மொழி (அரவிந்த் சாமி). ஊரில் ஒரு உறவினர் கலயாணத்திற்கு செல்கிறார். அங்கே வரும் ஒரு உறவுக்கார இளைஞர் (கார்த்தி) ஒருவர் அருள்மொழியை நன்றாக  உபசரிக்கிறார். வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். மனைவியை அறிமுகம் செய்கிறார். நீடாமங்கலம் பகுதியை முழுவதும் சுற்றிக் காட்டுகிறார்.

அருள்மொழி  எவ்வளவோ முயற்சி செய்தும்  இளைஞர் பெயரை தெரிந்துகொள்ள முடியவில்லை. அருள்மொழி சென்னைக்கு சென்று அந்த இளைஞர் பெயரை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். ‘மெய்யழகன்’ என்ற இயற்பெயர் கொண்ட அந்த இளைஞர் பெயரை அருள்மொழியால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதே ‘மெய்யழகன்’ படத்தின் கதை.

இந்தப்  படத்தை பற்றி ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வழக்கமான படம் இல்லை இது. பரபரப்பான திரைக் கதையோ, ட்விஸ்ட்டோ இப்படத்தில் இல்லை. ஆனால், பால்ய கால நினைவுகளை தேடும் ஒரு அழகியல் படத்தில் இருக்கிறது. நம் அப்பா சிறு வயதில் வாங்கித் தந்த சைக்கிள், அந்த சைக்கிளில் நண்பனை அழைத்து சென்றது, முதலில் பார்த்த சினிமா இப்படி பல விஷயங்களை நம் நினைவுகளிலிருந்து மீட்டெடுக்கிறது இப்படம். பொருளாதாரத் தேவைகளுக்கு வெளிநாட்டிலும், வெளி ஊர்களிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நம்மில் பலர் சொந்த கிராமத்திற்கு   வந்தால் ஏற்படும் உணர்வை இப்படம் தருகிறது. நீடாமங்கலம் தெருவின் வீதிகள், கோயில்கள் என அனைத்துமே கதை சொல்கின்றன.

இதையும் படியுங்கள்:
வேள்பாரி நாவலின் காட்சிகளை பார்த்து கடுப்பான ஷங்கர்! சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வரும் மக்கள்!
Meiyazhagan Movie Review

இருந்தாலும், காட்சிக்குக் காட்சி பரபரப்பை எதிர்பார்க்கும் 2k கிட்ஸ்களை இந்தப் படம் கவருமா என்பது சந்தேகமே. கார்த்தி, அரவிந்த் சாமி  இருவரின் உரையாடல்களை வைத்தே படம் நகர்வது ஒரு மேடை நாடகம் பார்த்த உணர்வைத் தருகிறது. மூன்று மணி நேர நீளம் என்பது இப்படத்திற்கு சற்று அதிகம். தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம், இலங்கை தமிழர் படுகொலை, கரிகால பெருவளத்தான் என சில பிளேவர்களும் படத்தில் இருக்கிறது. வசனங்கள் ஆதிக்கம் செலுத்தும் கதையில் சிறு சிறு முக வேறுபாட்டின் வழியே நடிப்பை வித்தியாசப்படுத்துகிறார். ஒட்டுமொத்த கதையையும் தாங்கிப்பிடிப்பது கார்த்தியின் நடிப்புதான். அரவிந்த் சாமி கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் டைரக்டர் இதற்கு முன்பு இயக்கிய '96' ஒரு பீல் குட் படமாக இருந்தது. இந்த ‘மெய்யழகன்’ படத்தை  குட் என்று சொல்லலாம். ஆனால் பீல் பண்ண வைக்கவில்லை. பாதி பேர் சொந்தக்காரங்க இருக்கிற ஊர்ல ஒருத்தன் பேரை கண்டுபிடிக்கிறதா கஷ்டம் என்ற லாஜிக் கேள்வியை கேட்காமல் படம் பார்த்தால் இந்த மெய்யழகனை உங்களுக்குப் பிடிக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com