விஜய் சேதுபதி இந்தி கற்றுக்கொண்டது எப்படி தெரியுமா?

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

ந்தி மொழி குறித்து நடிகர் விஜய்சேதுபதி பேசிய கருத்து பேசுபொருளாகியுள்ளது.

லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, புதுப்பேட்டைச், லீ, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ஆகிய பல படங்களில் பின்னணி நடிகராக நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தனது இயல்பான நடிப்பாலும் கடின உழைப்பாலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் எனும் படத்தில் நடித்துள்ளார். அந்தாதூன் பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. இதில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இந்தி பாகத்திற்கு தனது கேரக்டருக்கு நடிகர் விஜய் சேதுபதியே சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நடைபெற்ற சலசலப்பில், தான் துபாயில் வேலை பார்த்ததால் தான் இந்தி நன்றாக பேசுவேன் என விஜய்சேதுபதி விளக்கமளித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இந்தி எதிர்ப்பு குறித்து விஜய் சேதுபதி கூறிய கருத்து பேசு பொருளாகியுள்ளது. அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், இந்தி படிக்க வேண்டாம் என்பது தமிழ்நாட்டில் நீண்ட காலமாகச் சொல்லப்படுகிறதே என்ற கேள்வியை விஜய் சேதுதிபதியிடம் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், தன்னை போன்றவர்களிடம் இந்த கேள்வியை கேட்பதால் என்னவாகப் போகிறது என்று கூறினார்.

மேலும், இந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவே இல்லை. திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு சார். இதை தான் பிடிஆரும் குறிப்பிட்டு கூறினார் எனவும் தெரிவித்தார். இப்போது ஹிந்தி சினிமா தமிழ் நடிகர்களை எப்படி பார்க்கிறீர்கள். நான் ஹிந்தியில் 5 படம் பண்ணி விட்டேன். ரொம்ப கம்போர்டபிலாக இருந்தது. நிறைய படங்கள் எல்லா மொழியிலும் வருகிறது. கத்தினா, ராதிகா இரண்டு பேரும் நல்ல திறமைசாலிகள் எனவும் பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com