மைக்கேல் : ரத்தத்தால் வரைந்த ஓவியம்

மைக்கேல் : ரத்தத்தால் வரைந்த ஓவியம்
Published on

பல படங்களில் நாம் பார்த்து போதும் என்று சொல்லும் அளவுக்கு வந்த மும்பை, போதைப் பொருள், தாதா, சென்டிமெண்ட், ரத்தம் சொட்டச் சொட்டக் கொலைகள் என வந்துள்ள படம் ‘மைக்கேல்‘.      ரஞ்சித் ஜெயகொடி இயக்கி உள்ளார்.   படம் ஃபிளாஷ்பேக்குடன்  தொடங்குகிறது. ஒரு சிறுவன் ஒருவரைக் கொல்லும் எண்ணத்தில் பழைய பம்பாய் நகரத்தில் நுழைக்கிறான். பிரபல தாதாவைக் காப்பாற்றுகிறான். தாதா தன் அடியாள் ஒருவனிடம் அவனை ஒப்படைத்து வளர்க்கச் சொல்கிறார். சிறுவனும் இளைஞனாக ஆனதும் தாதாவிடம் வேலைக்குச் சேர்கிறான். தாதா அந்த இளைஞனை  டெல்லியில் உள்ள ஒரு அப்பா -மகளை கொலை செய்ய அனுப்புகிறார். ஆனால் இளைஞனுக்கு அந்தப் பெண்ணுடன் காதல் ஏற்படுவதால் அவளைக் கொல்லாமல் விட்டு விடுகிறார்.

அதனால், கோபம் கொள்ளும் தாதா, அந்தப் பெண்ணையும், இளைஞனையும் கொலை செய்ய வேறு ஒருவரை அனுப்புகிறார். ஒரு கட்டத்தில் தாதாதான் இளைஞனின் தந்தை என்றும், இளைஞன் வந்ததே தாதாவைக் கொலை செய்யத்தான் என்றும் தெரிய வருகிறது.                                     

ப ல பேர் சுட்டும் ஒரு குண்டு கூட பாயாமல் ஹீரோ  தப்பிப்பது, குண்டு பாய்ந்தும் பிழைப்பது எனப் பல படங்களில் பார்த்ததை அப்படியே காட்சிப்படுத்தி உள்ளார்கள்.                   

கெளதம்  மேனன் அமைதியான வில்லனாக நடித்து நல்ல நடிப்பைத் தந்துள்ளார். கத்தியையும், துப்பாக்கியையும் தூக்காமல் கண்களால் மிரட்டி இருக்கிறார்.                       

சந்தீப் என்னதான் ஆக்க்ஷன் செய்தாலும், ஜிம் பாடி போல உடம்பைக் காட்டினாலும், சந்தீப்பை திரையில் ஒரு தாதா போல ஏற்க முடியவில்லை. 

இன்னமும் சாக்லெட் பாய் லுக்கில்தான் இருக்கிறார். திவாசனா காதலில் ஏங்குவதும், காதலன் உயிருக்குப் போராடும்போது தவிப்பதும் என மாறுபட்ட நடிப்பைத் தந்துள்ளார்.                       

விஜய் சேதுபதியின் நடிப்பும், கேரக்டரும் கதைக்கு ஒட்டவே இல்லை. படத்தில் ஆறுதலான விஷயம் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும்தான். ஒவ்வொருவராக வந்து ஹீரோவிடம் அடி வாங்குவது, என்ன அடித்தாலும் ஹீரோ தாங்குவது என எத்தனை நாளுக்குத்தான் படம் எடுக்கப் போகிறார்கள்!???           

 மைக்கேல் - தேவையில்லாத மாஸ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com