Mission Chapter 1 Movie Review
Mission Chapter 1 Movie Review

விமர்சனம்:மிஷன் சாப்டர் 1

Published on
மிஷன் சாப்டர்1 : மீண்டும் தீவிரவாததிற்கு மத சாயம் பூச முயற்சி!(2.5 / 5)

லைகா நிறுவனம் வெளியிட AL விஜய் இயக்கத்தில் வந்துள்ள மிஷன் சாப்டர் 1 அருண் விஜய், எமி ஜாக்சன் இப்படத்தில் நடித்துள்ளார்கள். குணசேகரன் கதாபாத்திரல் வரும் அருன் விஜய் தனது மகளின் மருத்துவத்திற்காக லண்டன் செல்கிறார். அங்கே ஒரு பிரச்சனையால் சிறைக்கு செல்கிறார். சிறையில் இருக்கும் தீவீரவாதிகளை விடுவிக்க, உமர் பாய் என்ற தீவிரவாதி கலவரத்தை தூண்டி விடுகிறார். 

இந்த கலவரத்திற்கு நடுவில் தனது குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் மிஷன் சாப்டர் 1                    படத்தின் பல காட்சிகள் சிறைசாலையில் படமாக்க பட்டுள்ளது. படத்தின் முதல் பாதி மாறுபட்ட காட்சிகளுடன், வித்தியாசமாக நகர்கிறது. இரண்டாம் பாதி அதிகம் சண்டை காட்சிகளுடன் ஒரு சாதாரண படமாக செல்கிறது. சண்டை காட்சிகள் நிறைய இருந்தாலும் ரசிக்க முடிகிறது.

அருண் விஜய் நடிப்புடன் சண்டை காட்சியிலும் நன்றாக உழைத்திருகிறார். இவருக்கு இணையாக எமி ஜாக்சனும் சண்டை காட்சிகளில் கலக்கி விட்டார். சேச்சி யாக வரும் நிமிஷாவின் நடிப்பு ஒரு மலையாள  நர்சை கண் முன் கொண்டு வருகிறார். ஜி. வி பிரகாஷ் அளவாக இசை அமைதிருக்கிறார். வில்லன் கேமரா முன் நின்று படம் முழுக்க பேசிக்கொண்டே இருப்பதால் நமக்கு பயம் வரவில்லை.

ஒளிப்பதிவு, இசை, எடிடடிங் என பல அம்சங்கள் படத்தில் இருந்தாலும் வலுவான திரைக்கதை இல்லாததால் இந்த மிஷன் ரீச் ஆக வில்லை.மீண்டும் தீவிர வாததிற்கு மத சாயம் பூச முயற்சி செய்யும் படம் தான் இது. அருண் விஜய் ஆக்ஷனை மட்டும் நம்பாமல்  கதையை நம்பி நடிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அயலான் விமர்சனம்!
Mission Chapter 1 Movie Review
logo
Kalki Online
kalkionline.com