

மதராசபட்டினம் படத்தின் கதாநாயகி எமிஜாக்சனின் புது அவதார வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை எமிஜாக்சன், அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். வெளிநாட்டவர் தோற்றத்தில் தோன்றிய எமிஜாக்சன் ஐ படத்திலும் விக்ரமுக்கு ஜோடியாக அசத்தலாக நடித்திருப்பார். இந்த படங்கள் மூலம் பிரபலமான இவர், தற்போது மிஷன் 1 படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜய்யுடன் கைகோத்திருக்கிறார். இருவரும் இணையும் இந்த படத்துக்கு ‘மிஷன் சாப்டர்-1’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் நிமிஷா சஜயனும் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது. பொங்கலுக்கு நிறைய படங்கள் வரிசை கட்டியுள்ள நிலையில் இந்த படமும் அதில் உள்ளது.
இந்த படத்தில் தான் அருண் விஜயும், எமிஜாக்சனும் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக நடிகை எமிஜாக்சனை இப்படி பார்த்திராத ரசிகர்கள் எமிஜாக்சனா இது என கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது எமிஜாக்சனின் சண்டை காட்சிகள் வெளியாகியுள்ளது. ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் எமிஜாக்சன் நிஜ ஃபைட்டர்களுக்கு டஃப் கொடுப்பது போன்று உள்ளது.
