நிறையச் சிரிக்கவைத்தவர்- கண்களை ஈரமாக்கினார்: இயக்குனர் சித்திக் மறைவுக்கு மோகன்லால் உருக்கம்!

இயக்குனர் சித்திக்
இயக்குனர் சித்திக்

கேரளாவைச் சேர்ந்த முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய சித்திக் மாரடைப்பு காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு நடிகர் மோகன்லால் உருக்கமான இரங்கள் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த முன்னணி இயக்குனரான சித்திக் கேரளாவின் குச்சியில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவர் தமிழில் பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா, சாது மிரண்டா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் வெற்றி படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் சித்திக்கின் உடைய மறைவிற்கு கேரளாவில் முன்னணி நடிகரான மோகன்லால் விடுத்துள்ள இரங்கல் பதிவில்,“என்னால் சித்திக்கின் மரணத்தை நம்ப முடியவில்லை. கதைகளை இயல்பாகவும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை கதாபாத்திரங்கள் மூலம் ஆழமாகவும் வெளிப்படுத்தி மலையாள மக்கள் நம்பிக்கை இயக்குனராக மாறியவர் சித்திக். புதுமையான கருத்துகள், அற்புதமான அவருடைய இயக்கத்தின் காரணமாக வெளிவரும் படங்களை எதிர்பார்த்து பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கேரளா முழுவதும் காத்திருக்கின்றனர்.

நிறையச் சிரிக்க வைத்தவர். கண்களை ஈரமாக்கினார், உயரங்களை எட்டிப்பிடிப்பதற்காகத் தனது சொந்த வாழ்க்கை மூலம் நமக்கு வழிகாட்டினார். தனது எதார்த்தமான பேச்சின் மூலம் அன்பை வெளிப்படுத்துபவர். யாருடனும் கோபம் கொள்ளாமல், ஆடம்பரம் இல்லாமல் சாதாரண மனிதராக வாழ்ந்தவர். அவர் உதவி இயக்குநராக இருந்தபோது முதல் படமான 'நோக்கெத்தா தூரத்துக் கண்ணும் நட்டு' படம் தொடங்கி இறுதி படமான 'பிக் பிரதர்' வரை அவர் படைப்புகளில் நான் நடித்துள்ளேன். படத்தின் தலைப்பில் மட்டுமல்ல சினிமாவிலும் நிஜ வாழ்க்கையில் எனக்கு பிக் பிரதராக இருந்தார் சித்திக் என்று மோகன்லால் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com