விருஷபா படத்தில் லாலேட்டனின் முதல் லுக் போஸ்டர்!

மோகன்லால்
மோகன்லால்

லையாள நடிகர் மோகன்லாலுக்கு தமிழ் நாட்டிலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் சில காட்சிகளில் ரஜினியுடன்    இணைந்து நடித்திருந்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மோகன்லாலை மலையாள ரசிகர்கள் லாலோட்டன் என்று செல்லமாக அழைப்பார்கள்.தற்போது  விருஷபா படத்திலிருந்து வெளியான லாலோட்டனின்  ஃபர்ஸ்ட் லுக், பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆகஸ்ட் 24 அன்று, விருஷபா படத்தின்  முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டது.

மேலும் ரசிகர்களை  உற்சாகப்படுத்தும்  வகையில் பான்-இந்திய அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் விருஷபா படத்திலிருந்து, மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனரர் படக்குழுவினர். தற்போது இணையம் முழுக்க இந்த ஃபர்ஸ்ட்லுக் பெரும் பேசுபொருளாகி வருகிறது.

பர்ஸ்ட் லுக்கில் மோகன்லால் அரச உடையில், கையில் வாளுடன், தீவிரமான பார்வையுடன், மிரட்டலான லுக்கில் தோற்றமளிக்கிறார். மோகன்லாலின் இந்த லுக்   சமூக வலைதள பக்கங்களில் பாராட்டுக்களை  குவித்து வருகின்றது. மோகன்லாலின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பிறகு, படத்தின் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. 

விருஷபா படக்குழுவினர்
விருஷபா படக்குழுவினர்

விருஷபா படத்தில் மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹ்ரா எஸ் கான், ஸ்ரீகாந்த் மேகா மற்றும் ராகினி திவேதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக விருஷபா இருக்கும் என சினிமா வட்டாரம் எதிர் பார்க்கிறது.

விருஷபா திரைப்படத்தை கனெக்ட் மீடியா மற்றும் பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்குகின்றன.நந்த கிஷோர் இப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com