பிரபல ஹாலிவுட் திரைப்படமான முஃபாசா- தி லயன் கிங் படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஒரு படம் தி லையன் கிங். `டிமோன் அண்ட் பும்பா' என்ற கார்டூனில் வரும் சிங்கத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. இது கடந்த 1994ம் ஆண்டு அனிமேஷன் படமாக உருவாக்கப்பட்டது. இந்த படம் சிம்பாவின் தந்தை முபாசாவின் இளமைக்காலத்தை பற்றியது. முஃபாசா எப்படி காட்டின் ராஜாவாக மாறினார் என்பது பற்றிய கதையாகும். இப்படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கினார்.
அதன்பின்னர், . 2019-ம் ஆண்டு வெளியான 'தி லயன் கிங்' ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகளவில் பெரிதளவு பேசப்பட்ட இந்தப் படம் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் வாங்கியது. வசூல் ரீதியாக பெரிய ஹிட் அடித்தது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இதுவும் உலக மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியானது.
இப்படம் உலகளவில் 3 ஆயிரத்து 500 கோடி அளவு வசூல் செய்தது.
இப்படமானது ஆதரவற்று வளரும் சிங்கம் முஃபாசா தனக்கான சாம்ராஜ்யத்தை எப்படி கட்டமைக்கிறது என்ற கதையை கொண்டதாகும்.
ஹிந்தியில் ஷாருக் கான், அவரது மகன்கள் ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோர் டப்பிங் செய்துள்ளனர். தமிழில், முஃபாசாவுக்கு அர்ஜுன் தாஸ், டக்காவிற்கு அசோக் செல்வன் ஆகியோருடன் ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, நாஸர், விடிவி கணேஷ் ஆகியோர் டப்பிங் செய்திருக்கிறார்கள்.
இந்தப் படம் நாளை ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகவுள்ளது. தியேட்டரில் படம் பார்க்காதவர்கள், ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.