மனசாட்சியை கழற்றிய முகுந்தன் உன்னி அஸோசியேட்ஸ்!

வினீத் ஸ்ரீனிவாசன்
வினீத் ஸ்ரீனிவாசன்
Published on

முகுந்தன் உன்னி அஸோசியேட்ஸ் (மலையாளம் ) சாலை விபத்துகளுக்கு பின்னால் இன்சூரன்ஸ் மோசடிகளை பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. இதை மைய்யமாக வைத்து விமல் கோபாலகிருஷ்ணன் மற்றும் அபிநவ் சுந்தர் நாயக் இணைந்து ஒரு கதையை உருவாக்கி அபிநவ் சுந்தர் இயக்கியுள்ளார்.             

வினீத் ஸ்ரீனிவாசன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் பெயர் 'முகுந்தன் அஸோசியேட்ஸ்'. சட்டம் படித்துவிட்டு வழக்காட எந்த வாய்ப்பும் இல்லாமல் இருப்பவர்  முகுந்தன் (வினீத் ஸ்ரீனிவாசன் ). தனது தாய் ஒரு சிறு விபத்தில் சிக்க ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறான். அது ஒரு எம். எல். ஏ. ஒருவரின் கணவருக்கு சொந்தமானது.   

அங்கே வழக்கறிஞர் வேணு (சூரஜ் வெஞ்சாமரமுடு) விபத்தில் சிக்கி ஹாஸ்பிடலுக்கு வரும் நோயாளிகளுக்கு தவறா  ன முறையில் சான்றிதழ் தயாரித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று தருகிறார். வேணுவின் உதவியை நாடி மருத்துவ செலவை சமாளித்து விடுகிறான் முகுந்தன். வேணுவை போல தானும் விபத்துகளுக்கு இன்சூரன்ஸ் பெற்று தரும் ஏஜென்ட்டாக மாறி நிறைய பணம் சாம்பாதிக்கிறான் முகுந்தன்.           

ஒரு கட்டத்தில் வக்கீல் வேணுவை நயவஞ்சகமாக பாம்பை விட்டு கொன்று விடுகிறான்.விபத்து கேஸ்கள் மருத்துவமனைக்கு வரும் போது ஏஜென்ட்டாக செயல் பட்டு பணம் நிறைய சாம்பாதிக்கிறான். காவல் துறையினர் ஒரு விசாரணை கைதியை அடித்து அழைத்துவரும் வழக்கில் விபத்து போல மாற்றும் முயற்சியில் தவறாக சான்றிதழ் தயாரித்து மாட்டி கொள்கிறான்.                     

வினீத் ஸ்ரீனிவாசன்
வினீத் ஸ்ரீனிவாசன்

இதன் பிறகு நடக்கும்,எதிர் கொள்ளும் சம்பவங்கள் திரைக்கத்தையை சுவாரசியப் படுத்துக்கின்றன. ஒரு சாலை விபத்தின் பின் புலத்தில் இருக்கும் மருத்துவமனை, நீதிமன்றம், காவல் துறை என்ற மூன்று அம்சங்களையும் ஒரு முக்கோண விதியில் புரிய வைத்துள்ளார் டைரக்டர்.படத்தின் பல காட்சிகள் ஹாஸ்பிடலை சுற்றியே நகர்கிறது.       

வழக்கறிஞர்கள் வக்கீல் தொழிலை மட்டும் செய்வதில்லை, மருத்துவர்கள் மருத்துவம் மட்டும் பார்ப்பதில்லை.காவல் துறையினர் காவல் பணிகளை மட்டும் செய்யவில்லை. அனைவரும் ஒரு விபத்து நடந்தால் பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள்.        உண்மையை எந்த வித சமரசமும் இல்லாமல் சொல்லி இருக்கிறார் டைரக்டர்.இப்படி துணிவுடன் ஒரு படம் தந்ததற்கு இந்த டீமை பாராட்டலாம்.

வினீத் ஸ்ரீனிவாசன் தென்னிந்திய சினிமாவிற்கு கிடைத்த சிறந்த நடிகர். படத்தின் முதலில் இருந்து கடைசி வரை நடிப்பில் ஒரு வித குறும்புதனம் தெரிகிறது. எதிர் வக்கீலிடம் ஒரு முகமும்,விபத்தில் பாதிப் படைந்த குடும்பத்தினரிடம் ஒரு முகம் என பிரமாதம் சொல்ல வைக்கிறார். சூரஜ் வெஞ்சாமரமுடு ஒரு யதார்த்த வக்கீலை நினைவுபடுத்துகிறார்.   

அர்ஸா சாந்தினி காதலை கண்களில் காட்டுகிறார். நீங்கள் இன்சூரன்ஸ் பற்றி யோசிக்கும் போது இந்த படம் நினைவுக்கு வருவது உறுதி. முகுந்தன் உன்னி அஸோசியேடஸ் மனசாட்சியை கழற்றி வைத்த மனிதர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com