31 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ராஜாக்கள்!

Bharathiraja and ilayaraja
Bharathiraja and ilayaraja

 16 வயதினிலே தொடங்கி நாடோடி தென்றல் திரைப்படம்  வரை பாரதிராஜா-இளையராஜா கூட்டணி பல்வேறு வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தது. நாடோடி தென்றல் படத்திற்கு பின்பு இந்த இருவரின் கூட்டணி பிரிந்து விட்டது.இந்நிலையில், 31 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது பாராதிராஜா மற்றும் இளையராஜா கூட்டணி இணைந்துள்ளது.

இந்த முறை இந்த கூட்டணி மகனுடன் நடக்க உள்ளது. பாரதிராஜா வின் மகன் மனோஜ் பாரதிராஜா இளையராஜாவின் இசையில்  இணைந்து மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்குகிறார்.இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராகவும்  அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முக்கிய  வேடங்களில் நடிக்கிறார்கள்.

 'மார்கழி திங்கள்' திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் உருவான பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாடல் அனைவரின் இதயங்களையும் தொடும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். 

இயக்குநர் மணிரத்னத்திடம் 'பம்பாய்' படத்தில் உதவி இயக்குந‌ராக மனோஜ் பாரதிராஜா பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. மார்கழி திங்கள் படம் தொடங்கும் முன் மணிரத்னத்தை சந்தித்து மனோஜ் ஆசி பெற்றார்.இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறுகிறார்.

இளையராஜா -பாரதிராஜா பிரிவிற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பிரிவுக்கு காரணங்கள் பல இருந்தாலும், இந்த இரு மகா கலைஞர்களும் இனைய மகன் மனோஜ் பாரதிராஜா காரணமாக இருக்கிறார். இதன்காரணமாக இரு ராஜாக்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com