
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள அனிருத் பெரும்பாலும் அவர் இசையமைக்கும் பாடல்களுக்கு அவரே பாடலையும் பாடி விடுகிறார். இதனால் பின்னணிப் பாடகர்களுக்கு வாய்ப்பு குறைவதாக கூறப்படுகிறது.
தமிழில் அதிக அளவிலான படங்கள் வெளியாவதாலும், தமிழ் படங்களில் அதிகமான பாடல்கள் இடம் பெறுவதாலும் பின்னணி பாடகர்களுக்கான வாய்ப்பு தமிழில் அதிகரித்திருக்கிறது. இதனால் பின்னணி பாடகர் அது சார்ந்த தொழிலாளர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் பல வெற்றி பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் பாடல்களுக்கும் இசையமைத்து வருகிறார். இதனால் இந்தியாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக மாறியிருக்கிறார்.
இந்த நிலையில் அனிருத் இசையமைக்கும் படங்களில் பெரும்பான்மையான படங்களுக்கு அவரை பாடல்களை பாடி விடுவதால் பின்னணி பாடகர்களுக்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாக பின்னணி பாடகர்கள் தெரிவிக்கின்றனர். அனிருத் தனது திறமையை வளர்த்துக்கொள்ளும் அதேசமயம் பல பின்னணி பாடகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஒரு முன்னணி இசையமைப்பாளர் பின்னணி பாடகர்களின் பொருளாதாரத்தை முடக்கும் விதமாக செயல்படுவதாகவும் கூறுகின்றனர்.
தற்போது விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தில் கூட அனிருத் இரண்டு பாடல்களை பாடி உள்ளார். அனிருத் இவ்வாறு தொடர்ந்து பாடல்களை பாடி கொண்டிருப்பதால் பாடகர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மேலும் அனிருத் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாது பிற இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கும் பாடகராக மாறி இருக்கிறார். இதன்காரணமாக பாடகர்களுக்கு வாய்ப்பு குறைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.