சென்னையில் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி!

 சந்தோஷ் நாராயணனின்
சந்தோஷ் நாராயணனின்
Updated on

சென்னையில் இசையமைப்பாளர் சந்தோஷ நாராயணன் இசை நிகழ்ச்சி நடத்துவதாக அறிவிப்பு.

தமிழில் முன்னணி இசையமைப்பாளர்கள் ஒருவராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன். இவர் 1983 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் இசையை கற்றுத் தேர்ந்து 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.

மேலும் இதற்கு முன்பே தெலுங்கு திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழில் பீட்சா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, மெட்ராஸ், கர்ணன் ஆகிய படங்களில் இசையமைத்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சென்னையில் இசைக்கச்சேரி நடத்த இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நீயே ஒளி என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அருகில் பிப்ரவரி 10ஆம் தேதி சந்தோஷ் நாராயணன் இசைக்கச்சேரி நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நீயே ஒளி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் குழுவினர் இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார்களாம். அதே சமயம் சமீபத்தில் நடைபெற்ற ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் அதிக அதிக அளவிலான கூட்டம் கூடியதால், கடுமையான போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது.

இதை அடுத்து சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

மேலும் சந்தோஷமா நாராயணன், இயக்குனர் ரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சிக்கு போட்டியாக நீயே ஒளி நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் ப.ரஞ்சித் ஆதரவாளர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com