கேம் சேஞ்சர் அப்டேட் சொன்ன இசையமைப்பாளர் தமன்... குஷியில் ரசிகர்கள்!

Game changer
Game changer

கேம் சேஞ்சர் படத்தின் இசையமைப்பாளரான தமன் தெலுங்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் ஊழலுக்கு எதிரான கதைக்களத்தை கொண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து நீண்ட ஆண்டுகள் கழித்து இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவு செய்தார். அதற்காக நடிகர் கமலஹாசன் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக படம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் தற்போது தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பாதியில் நின்ற போது இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கத் தொடங்கினார்‌. இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் இசையமைப்பாளரான தமன் தெலுங்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27 அன்று வெளியாகும் என்றார். கேம் சேஞ்சர் அப்டேட் கேட்டுக் கொண்டிருந்த ராம் சரணின் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com