என்னுடைய அனைத்து விவாகரத்துக்கும் எனது தந்தைதான் காரணம் – வனிதா ஓபன் டாக்!

vanitha & vijayakumar
vanitha & vijayakumar
Published on

தன்னுடைய அனைத்து விவகாரத்துக்கும் காரணம் எனது தந்தைதான் என்று வனிதா கூறியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனிதா விஜயகுமார் 1995ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். ஆனால், அதன்பின்னர் அவ்வளவாக சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் குடும்பத்துடன் நேரம் செலவிட்டார். ஆனால், குடும்ப வாழ்க்கையும் அவருக்கு அவ்வளவு சரியாக அமையவில்லை. மேலும் தந்தை விஜயகுமாருடன் போட்ட சண்டையில் தமிழக மக்களிடையே பெரிய அளவு பேசப்பட்டார். பின்னர் விஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதன்பின்னர் 2007ம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்துக்கோண்டு 2012ம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் பீட்டர் பால் இறந்துவிட்டார்.

வனிதாவிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 

அந்தவகையில் சமீபத்தில் ஆண்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் கொண்டாடும் ஆண்கள் யார்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் வனிதா தனது தந்தைக் குறித்து பேசியிருக்கிறார்.

அதாவது, “பெண்களால் ஆண்களைவிட மிக எளிதாக ஒருவரை மறக்கவும் முடியும் மன்னிக்கவும் முடியும். என்னுடைய சிறு வயதில் எனது தந்தைதான் இந்த உலகில் மிகவும் நல்ல தந்தை மற்றும் கணவர் என்று எண்ணினேன். ஏனெனில் எனது தந்தைக்கு இரண்டு மனைவிகள். ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கையில் இரண்டு மனைவிகள் என்பது சாத்தியம் கிடையாது. ஒரு மனைவியை வைத்திருக்கும் ஆண்களே திண்டாடுகின்றனர். அப்படி இருக்கும்போது அப்பா இரண்டு மனைவிகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்து நடத்தியதால் தான் இப்போதும் ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார். என்னுடைய அம்மா இரண்டாவது மனைவி தான். என்னுடைய அப்பாவையும் இரண்டாவது அம்மாவையும் அவருடைய முதல் மனைவி ஏற்றுக் கொண்டார்.

இதையும் படியுங்கள்:
'தேனிசைத் தென்றல்' தேவா பிரபலமானதற்கு இதுவும் ஒரு காரணம்...
vanitha & vijayakumar

ஆண்களுக்கு பொதுவாக ஒரே நேரத்தில் பல வேலைகளை பெண்கள் போல் செய்ய முடியாது. ஆனால் எனது அப்பா அப்படியில்லை. அவர் குடும்பத்தை மட்டுமில்லாமல் தொழிலிலும் கவனமாக இருப்பார். வீட்டு வேலை, குடும்பம், தொழில் என எல்லாத்தையுமே சிறப்பாக கையாளுவார். அப்படி என்னுடைய அப்பாவை பார்த்ததால் தான் வாழ்க்கையில் வந்த எல்லா ஆண்களும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

இதேபோல்தான் அருணும். ஆகையால் அவர்களை போலவே அனைத்து ஆண்களும் இருப்பார்கள் என எண்ணினேன். ஆனால், அவர்கள்போல எனக்கு அமையவில்லை. இதனால் ஆண்களுடனான உறவை ஏற்றுக்கொள்ள மனம் ஒத்துக்கொள்ளவில்லை.” என்று பேசியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com