

குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களில் சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசிய டைரக்டர் ராஜு முருகன் மை லார்ட் என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ரெட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முத்து சிற்பி (சசிகுமார்) கோவில் பட்டியில் வசித்து வருகிறார். இவரும், இவரது மனைவியும் ஒரு தீ விபத்தில் இறந்து விட்டதாக அரசு ஆவணங்களில் சொல்லப்படுகிறது. இதை மாற்ற போராட்டம் நடத்துகிறார் முத்து சிற்பி. இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சர்( ஆஷா சரத்) ஒருவருக்கு இரண்டு கி ட் னி யும் பழுதான நிலையில், தனது ஆட்களை வைத்து டோனர் தேடுகிறார். முத்து சிற்பிக்கு கிட்னி தானம் வழங்க எல்லா தகுதியும் இருப்பதால் முத்து சிற்பியை சென்னை யில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.உதவி க்கு வந்த மனைவி சுசிலாவுக்கு வயிற்று வலி வர மருத்துவர்கள் பரிசோதனை செய்கிறார்கள். சோதனையின் முடிவில் சுசிலா விக்கு ஒரு கிட்னி இல்லாமல் இருப்பது தெரிய வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியமால் முழிக்கிறார்கள் அமைச்சரின் உதவியாளர்கள். மத்திய மந்திரிக்கு கிட்னி கிடைத்ததா? முத்து சிற்பி என்ன செய்தார் என சொல்கிறது படம்.
த்ரிஷயம் படத்தில் காக்கி சட்டையில் ஒரு போலீஸ் அதிகாரியாக வந்து நம்மை மிரள வைத்த ஆஷா சரத் இந்த மை லார்ட் படத்தில் படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு நோயாளியாக இருந்து கொண்டே, முக பாவனை களிலும்,, குரல் ஏற்ற இறக்கத்திலும் ஒரு சிறப்பான வில்லத்தனத்தை காட்டிஉள்ளார் ஆஷா.
தனது மகன், மகள் இருவருமே தனக்கு கிட்னி தர முன் வராத இடத்தில் ஆஷாவின் நடிப்பு ஆஹா சொல்ல வைக்கிறது. ஆஷா விற்கு நடிப்பில் முதல் ரேங்க் என்றால் இரண்டாம் ரே ங் க் சசிகுமாருக்கும், சைத்ராவுக்கும் தரலாம். இருவரும் திரையில் ஒரு கணவன் மனைவியாக வாழ்ந்து உள்ளார்கள்.
படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியும், கிளைமாக்ஸ் காட்சி யும் சிறப்பாக உள்ளது. "வாடிய ப யிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வசனமும், இதற்கான காட்சி களையும் வைத்திருப்பது சிறப்பு. இந்த படத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. ஷான் ரோல்டன் இசையில் ஒப்பாரி ராக பாடல் சிறப்பாக உள்ளது.இருந்தாலும் பல இடங்களில் வசனத்தை விட பின்னணி இசை முன்னால் நிற்கிறது. படத்தின் முதல் பாதி மிக சாதாரண நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. இருந்தாலும் மனிதம் இன்னும் மரிக்க வில்லை என்று நல்ல கருத்தை சொன்னதற்கு இந்த படத்தை பார்க்கலாம்.