விரைவில் நட்சத்திரக் கலை விழா: ரஜினிகாந்துடன் நடிகர் சங்கத்தினர் ஆலோசனை!

நடிகர் சங்க உறுப்பினர்களுடன் ரஜினிகாந்த்
நடிகர் சங்க உறுப்பினர்களுடன் ரஜினிகாந்த்

நட்சத்திரக் கலை விழா நடத்துவது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் ரஜினிகாந்த்துடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்த புதிய கட்டடம் கட்டும் பணி போதிய பணம் இல்லாமல் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே இந்தக் கட்டடம் கட்ட பணம் கொடுத்து உதவிய பல பிரபலங்கள் மீண்டும் பணம் கொடுத்து உதவ முன்வந்தனர். அதன்படி, கமல், ரஜினி, சிவகார்த்திகேயன், நெப்போலியன், தனுஷ் உள்ளிட்ட பலர் தங்களுடைய சொந்த வைப்பு நிதியில் இருந்து தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவினர். தற்போது புதியக் கட்டடத்தின் பணிகள் 80 சதவீதம் வரை முடிந்துவிட்ட நிலையில், மீதம் 20 சதவீத பணிகள் மட்டுமே மீதம் உள்ளதாகவும், அவற்றை முடிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் ஆகியோர் இன்று (01.07.2024) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில் அடுத்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள். வேகமாக நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டடப் பணிகள் குறித்து ஆர்வமாகக் கேட்டறிந்த ரஜினிகாந்த், விரைவில் நேரில் வந்து கட்டடப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

ரஜினியை சந்தித்த நடிகர் சங்க உறுப்பினர்கள், இன்னும் ஓரிரு நாட்களில் கமல்ஹாசனையும் சந்தித்து நட்சத்திரக் கலை விழா குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com